உழைக்கும் வர்க்கம் உழைக்கும் வர்க்கம் 

வாரம் ஓர் அலசல்: மனிதராக மாற்றுகின்ற உழைப்பு

மற்றவரை மதிப்பதில் மதிக்கப்படுகின்றீர்கள், விமர்சனங்களை ஏற்கையில் வலிமையடைகிறீர்கள், உதவும் நேரத்தில் கடவுள் ஆகுகிறீர்கள், உழைக்கும் நேரத்தில் மனிதனாகுகிறீர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி இருபதாம் தேதி சமூக நீதி உலக நாளை, ஐக்கிய நாடுகள் நிறுவனம் கடைப்பிடிக்கின்றது, நாடு, இனம், மொழி, மதம் என்ற வேறுபாடின்றி அனைவரும் சமுதாயத்தில் நீதியோடு நடத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கத்தில் இந்த சமூக நீதி உலக நாள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த உலக நாள், பிப்ரவரி இருபதாம் தேதி கடைப்பிடிக்கப்படவேண்டும் என்று, 2007ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி, ஐ.நா. பொது அவை ஒப்புதல் தெரிவித்தது. அதற்குப்பின் 2009ம் ஆண்டிலிருந்து, ஒவ்வோர் ஆண்டும் சமூக நீதி உலக நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. சமூக நீதி தொழிலாளர் பெருமக்களுக்கு அதிகம் தேவைப்படுகின்றது. இந்தப் பின்புலத்தில், அ.பணி அருள் ஜான் போஸ்கோ அவர்கள், உழைப்பு என்பது என்ன? உழைப்பதால் ஏற்படும் பயன்கள் என்னென்ன? உழைக்க மறுத்தால் ஏற்படும் பின்விளைவுகள் யாவை? இதிலிருந்து எப்படி தற்காத்துக்கொள்ளலாம்? என்பது பற்றி  இன்று நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். இவர், வேலூர் மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர்.

வாரம் ஓர் அலசல் - அ.பணி அருள் ஜான் போஸ்கோ

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 February 2022, 14:01