இலங்கை போராட்டத்தில் மதத் தலைவர்கள் இலங்கை போராட்டத்தில் மதத் தலைவர்கள் 

அமைதியான முறையில் போராடுவதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது

பிரதமர் மகிந்த இராஜபக்ஷே அவர்கள் பதவி விலகியுள்ளதுபோன்று, அவரது சகோதரரான அரசுத்தலைவர் கோத்தபய இராஜபக்ஷே அவர்களும் பதவி விலகவேண்டும் - மதத் தலைவர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான்

இலங்கையில் இடம்பெற்றுவரும் அரசு எதிர்ப்புப் போராட்டங்களின் பின்புலத்தில்  பிரதமர் மகிந்த இராஜபக்ஷே அவர்கள் பதவி விலகியுள்ளதுபோன்று, அவரது சகோதரரான அரசுத்தலைவர் கோத்தபய இராஜபக்ஷே அவர்களும் பதவி விலகவேண்டும் என்று, அந்நாட்டு மதத் தலைவர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

இலங்கையின் அரசுத்தலைவர் கோத்தபய இராஜபக்ஷே அவர்களுடன், மே 09, இத்திங்களன்று அவசரகால சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ள, முக்கிய கத்தோலிக்க, மற்றும், புத்தமதத் தலைவர்கள், போராடுகிறவர்கள்மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்களுக்கு தங்களின் கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர்.

அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மக்கள் மீது, Trees கோவில், Galle Face Green ஆகிய இடங்களுக்கு அருகில் இடம்பெற்ற வன்முறைகளை அனைத்து ஊடகங்களிலும் தாங்கள் பார்த்ததாகக் கூறிய அம்மதத் தலைவர்கள், அந்நாட்டிற்குப் பிரிவினைவாதத்தைத் தூண்டாத ஒரு தலைவர் தேவை என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளனர்.  

மேலும், செய்தியாளர்களிடம் பேசிய, கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்களும், மக்கள் அமைதியான முறையில் போராடுவதற்கு உரிமையைக் கொண்டிருக்கின்றனர் என்று கூறியுள்ளதோடு, அங்கு இடம்பெற்றுள்ள வன்முறைக்கு எதிரான தன் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளார்.

கொழும்பு கத்தோலிக்க உதவி ஆயர்கள் J.D. Anthony,  Maxwell Silva, அருள்பணி Cyril Gamini Fernando, சிங்கள Urumaya கட்சியின் முன்னாள் உறுப்பினரான புத்தமதத்தின் Omalpe Sobhitha Thero, சில புத்தமத பிக்குகள் ஆகியோர் அரசுத்தலைவர் கோத்தபய இராஜபக்ஷே அவர்களைச் சந்தித்து, அவர் பதவி விலகுமாறு அழைப்புவிடுத்துள்ளனர்.

இதற்கிடையே, இலங்கையில் அரசியல் தலைவர்களுக்குச் சொந்தமான பல வாகனங்கள் மற்றும் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடி தற்போது தீவிரமடைந்துள்ள இந்நேரத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன என்று செய்திகள் கூறுகின்றன. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 May 2022, 13:12