லிபியாவின் தடுப்பு மையத்தில் நடைபெறும் சோதனை லிபியாவின் தடுப்பு மையத்தில் நடைபெறும் சோதனை  

மேற்கு ஆப்ரிக்காவில் துயருறும் மக்கள்!

மக்கள் அன்றாடம் சந்திக்கும் வறுமை, பஞ்சம், பட்டினி போன்றவற்றிலிருந்து மீள்வதற்கு புலம்பெயர்தல் ஒன்றே அவர்களுக்கு மாற்று வழியாக அமைந்துள்ளது: அருள்பணி Etamesor

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

புலம்பெயர்ந்து செல்வோரில் பலர் பெரும்பாலும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் என்றும், இவர்கள் தங்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர் என்றும், புலம்பெயர்ந்தோர் குறித்து கவலை தெரிவித்துள்ளார் அருள்பணியாளர் ஒருவர்.

ஜூலை 5, இச்செவ்வாயன்று, மத்தியதரைக்கடலில் மூழ்கி உயிரிழந்த மாலி நாட்டைச் சேர்ந்த 22 புலம்பெயர்ந்தோர் குறித்து இவ்வாறு கருத்துத் தெரிவித்த இயேசு சபை புலம்பெயர்ந்தோர் பணியின் மேற்கு ஆப்ரிக்க நாட்டின் ஒருங்கிணைப்பாளரான அருள்பணி Patrick Etamesor, இந்நிலை மிகவும் துயரம் நிறைந்தது என்றும் கூறியுள்ளார்.

மேற்கு ஆப்ரிக்காவில் மக்களின் நிலைமை துயரம் நிறைந்ததாக உள்ளது என்றும், சஹேல் தீவிரவாத வன்முறை, மோசமான நிர்வாகம் மற்றும் அதிகாரத்தில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்கள் ஆகியவைகள்தாம் இப்படிப்பட்ட சூழலுக்குக் காரணங்கள் என்றும் எடுத்துரைத்துள்ளார் அருள்பணி Patrick.

மேலும், காலநிலை மாற்றமும் மக்களையும் அவர்கள் வாழும் பகுதிகளையும் வெகுவாகப் பாதிப்படையச் செய்கிறது என்றும், இதனால் மக்கள் தங்களின் இருப்பிடங்களைவிட்டு வேறு இடங்களுக்குப் புலம்பெயர்ந்து செல்ல முடிவெடுத்து இத்தகைய ஆபத்தான பயணங்களை மேற்கொள்கிறார்கள் என்றும், கவலை தெரிவித்துள்ளார் அருள்பணி Patrick.

மக்கள் புலம்பெயர்ந்து செல்லும்போது இத்தகைய ஆபத்து நிறைந்த பயணங்களை மேற்கொண்டாலும், தாங்கள் அன்றாடம் சந்திக்கும் வறுமை, பஞ்சம், பட்டினி போன்றவற்றிலிருந்து மீள்வதற்கு இது ஒன்றே அவர்களுக்கான மாற்று வழியாக அமைந்துள்ளது என்ற உண்மையையும் வெளிப்படுத்தியுள்ளார் அருள்பணி Patrick.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 July 2022, 15:05