தாய்லாந்தில் FABC ஆயர்களுடன் திருத்தந்தை தாய்லாந்தில் FABC ஆயர்களுடன் திருத்தந்தை 

ஆகஸ்ட் 22ல் FABCன் 50வது பொதுப் பேரவை ஆரம்பம்

ஆகஸ்ட் 22, வருகிற திங்களன்று, தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் அருளாளர் Nicholas Bunkerd Kitbamrung ஆலயத்தில் FABC கூட்டமைப்பின் 50வது பொதுப் பேரவை ஆரம்பமாகிறது

மேரி தெரேசா: வத்திக்கான்

FABC எனப்படும் ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் ஐம்பதாவது ஆண்டை முன்னிட்டு, வரும் வாரத்தில் தொடங்கவிருக்கும் தங்களது பொது பேரவைக்காகச் செபிக்குமாறு அக்கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

ஆகஸ்ட் 22, வருகிற திங்களன்று, தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் அருளாளர் Nicholas Bunkerd Kitbamrung ஆலயத்தில் தொடங்கவிருக்கும் FABC கூட்டமைப்பின் 50வது பொதுப் பேரவையில், வருகின்ற ஆண்டுகளில் அக்கூட்டமைப்பின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடல்கள் நடைபெறும்,

இப்பேரவைக்காக கத்தோலிக்கர் சிறப்பாகச் செபிக்குமாறு ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

FABC கூட்டமைப்பு

1970ஆம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்கள், பிலிப்பீன்ஸ் நாட்டில் மூன்று நாள் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டபோது, ஆசியாவின் 180 கத்தோலிக்க ஆயர்கள் முதன் முறையாக மனிலாவில் ஒரு வாரக் கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தனர். அக்கூட்டத்தின் இறுதிப் பகுதியில் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்கள் கலந்துகொண்டார். இத்திருத்தந்தை ஆசிய ஆயர்களைச் சந்தித்த இந்நிகழ்வில், ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

ஆசிய ஆயர்கள் மத்தியில் கூட்டொருமையை வலுப்படுத்தும் ஆவலிலும், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் ஒளியில் “ஆசியாவில் திருஅவை” என்பதன் அர்த்தத்தை வெளிப்படுத்தவும் விரும்பிய ஆயர்கள், தங்களுக்கென்று உருவாக்கிய கூட்டமைப்புக்கு FABC எனவும் பெயரிட்டனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 August 2022, 15:16