மக்காவோ ஏழைகளுக்கு பிலிப்பீன்ஸ் புலம்பெயர்ந்தோர் உதவி!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நல்லுள்ளம் கொண்ட பல நன்கொடையாளர்களின் ஒத்துழைப்பாலும் ஆதரவாலும் மட்டுமே ஏழை மக்களுக்கு எங்களால் இந்தளவுக்கு உதவ முடிந்துள்ளது என்று Waraynon என்ற, பிலிப்பீன்ஸ் பொதுநிலையினர் கத்தோலிக்க அமைப்பின் தலைவர் Janette Waray கூறியுள்ளார்.
Macauவில் உள்ள பிலிப்பீன்ஸ் கத்தோலிக்கர், கோவிட்-19 பெருந்தொற்றின்போது கொண்டுவரப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக அதிகம் பாதிப்பிற்குள்ளான நூற்றுக்கணக்கான ஏழை மக்களுக்கு உணவளிக்க முன்வந்துள்ள நிலையில், இவ்வாறு கூறியுள்ளார் Janette Waray.
கடந்த ஆண்டு நிறுவப்பட்ட பிலிப்பீன்ஸ் புலம்பெயர்ந்தோரின் பொதுநிலை கத்தோலிக்க அமைப்பான Waraynon, மக்காவோ நகரில் வாழும் ஏறத்தாழ 500 குடியுரிமை பெறாதத் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கியுள்ளது என்று போர்த்துக்கீசிய மொழி கத்தோலிக்க வார இதழான Jornal O-Clarim தெரிவித்துள்ளது.
Waraynon அமைப்பானது, கத்தோலிக்க திருஅவை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் மக்களிடமிருந்து நிதி திரட்டி உதவி தேவைப்படும் அனைவருக்கும் பொருளுதவிகள் மட்டுமன்றி, நிதி உதவிகளும் வழங்கி வருகின்றது என்றும் யூக்கா செய்தி தெரிவிக்கின்றது.
Macauவின் ஏறத்தாழ 7,00,000 மொத்த மக்கள் தொகையில், ஏறத்தாழ 4.6 விழுக்காட்டினர், அந்நகரில் வாழ்கின்ற பிலிப்பீன்ஸ் புலம்பெயர்ந்தோராவர். அந்நகரிலுள்ள பிலிப்பீன்ஸ் புலம்பெயர்ந்தோரை ஒருங்கிணைப்பதற்காக, 2021ஆம் ஆண்டு, ஏப்ரல் 4-ஆம் தேதி, Waraynon அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பைத் தவி,ர Macauவிலுள்ள காரித்தாஸ் அமைப்பும் இந்நகரிலுள்ள ஏழை மக்களுக்குப் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்