புதிய கர்தினால்கள் (2020.11.28) புதிய கர்தினால்கள் (2020.11.28)  

நேர்காணல்: திருஅவையில் புதிய கர்தினால்கள்

ஆகஸ்ட் 29, வருகிற திங்கள், 30 செவ்வாய் ஆகிய இரு நாள்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதிய கர்தினால்களுடன், நற்செய்தியை அறிவியுங்கள் என்னும் புதிய திருத்தூது கொள்கைத் திரட்டு பற்றி கலந்துரையாடுவார்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு மே மாதம் 29ம் தேதி ஞாயிறு நண்பகல் வானக அரசியே வாழ்த்தொலி செப உரைக்குப்பின் 21 புதிய கர்தினால்களை திருஅவைக்கு அறிவித்தார். அவர்களில், இந்தியாவின், 69 வயது நிரம்பிய கோவா பேராயர் Filipe Neri António Sebastião do Rosário Ferrão, 60 வயது நிரம்பிய ஹைதராபாத் பேராயர் Anthony Poola, இன்னும் 68 வயது நிரம்பிய கிழக்குத் திமோர் பேராயர் Virgilio do Carmo Da Silva,  62 வயது நிரம்பிய சிங்கப்பூர் பேராயர் William Goh Seng Chye, Brunei Darussalam திருத்தூது நிர்வாகி ஆயர் Bishop Cornelius Sim, 47 வயது நிரம்பிய மங்கோலியா திருத்தூது நிர்வாகியும், இத்தாலியருமான பேரருள்திரு Giorgio Marengo ஆகிய ஆறு பேர் ஆசியத் திருஅவையில் பணியாற்றுகின்றவர்கள். கர்தினால்களாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த 21 பேரையும், ஆகஸ்ட் 27, வருகிற சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கர்தினால் நிலைக்கு உயர்த்துவார். இந்நிகழ்வை முன்னிட்டு அருள்பணி முனைவர் இயேசு கருணா அவர்களை சமூக ஊடகம் வழியாகத் தொடர்புகொண்டோம். இவர் CCBI எனப்படும் இந்திய கத்தோலிக்க இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் பேரவையின் விவிலியப் பணிக்குழுவின் செயலராகப் பணியாற்றுகின்றார். புதிதாக கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள கோவா பேராயர் பிலிப்நேரி அவர்கள், இந்திய கத்தோலிக்க இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் பேரவையின் தலைவராவார்.

புதிய கர்தினால்கள் -அருள்பணி முனைவர் இயேசு கருணா

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 August 2022, 15:03