ஆயர் Harold Anthony Perera அவர்கள், இலங்கை அரசுத்தலைவருடன் ஆயர் Harold Anthony Perera அவர்கள், இலங்கை அரசுத்தலைவருடன் 

இலங்கை அரசுத்தலைவர், ஆயர் பேரவைத் தலைவர் சந்திப்பு.

இலங்கையில் நிலவும் பொருளாதார மற்றும், அரசியல் நெருக்கடிகளால், கடந்த எட்டு மாதங்களில் 500க்கும் மேற்பட்ட மருத்துவர்களும், பொறியியலாளர்களும் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

இலங்கையில் நிலவும் பொருளாதார மற்றும், அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், மதத்தினர், குறிப்பாக கிறிஸ்தவர்கள் நாட்டின் பொது நலன், உண்மை மற்றும், நீதிக்காகப் பணியாற்றி வருவது குறித்து, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவரான, Kurunegala ஆயர் Harold Anthony Perera அவர்கள், இலங்கை அரசுத்தலைவரிடம் எடுத்துரைத்துள்ளார்.

அக்டோபர் 02, இஞ்ஞாயிறன்று இலங்கை அரசுத்தலைவர் இரணில் விக்ரமசிங்க அவர்களை, Kurunegala ஆயர் இல்லத்தில் சந்தித்து உரையாடியபோது, நாடு எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார மற்றும், அரசியல் நெருக்கடிகள் குறித்தும், கிறிஸ்தவ சமுதாயத்தின் நிலைப்பாடு குறித்தும் விரிவாக எடுத்துரைத்துள்ளார், ஆயர் அந்தோனி பெரேரா.  

இவ்வாண்டு ஜூலை மாதம் 21ம் தேதி அரசுத்தலைவராகப் பதவியேற்றபின் முதல் முறையாக, கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவரோடு கலந்துரையாடியுள்ளார், இரணில் விக்ரமசிங்க.

இதற்கிடையே, இலங்கையில் நிலவும் பொருளாதார மற்றும், அரசியல் நெருக்கடிகளால், நிதிசார்ந்த மற்றும், ஏனைய முக்கிய தொழில்புரிவோர் நாட்டைவிட்டு வெளியேறும் நிலை உருவாகியுள்ளது என்றும், கடந்த எட்டு மாதங்களில் 500க்கும் மேற்பட்ட மருத்துவர்களும், பொறியியலாளர்களும் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர் என்றும், நாட்டின் வருங்கால வளங்களையும் இழந்து வருகின்றோம் என்றும், பாராளுமன்றத்தின் முன்னாள் தலைவர் Karu Jayasuriya அவர்கள், அக்டோபர் 03, இத்திங்களன்று பீதேஸ் செய்தியிடம் அறிவித்துள்ளார்.

நாட்டின் வருங்காலம் குறித்து கவலைகொண்டுள்ள கத்தோலிக்கத் திருஅவையும், 23 இலட்சம் சிறாருக்குச் சத்துணவு தேவைப்படுகின்றது என யூனிசெப் அமைப்பு கூறியுள்ளதையும் பீதேஸ் செய்தியிடம் சுட்டிக்காட்டியுள்ளது. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 October 2022, 14:18