நேர்காணல் - செபமாலை மாதத்தின் சிறப்பு
மெரினா ராஜ் - வத்திக்கான்
பதிமூன்றாம் நூற்றாண்டின் தொடக்ககாலத்தில் இயேசுவின் இறைத்தன்மையை மறுக்கும் அல்பிஜீயன்ஸ் என்ற தப்பறைக் கொள்கையைப் பின்பற்றி வந்த மக்கள் டோமினிக் எனஅழைக்கப்படும் சாமிநாதர் என்பவரால் மனம்மாறி இயேசுவை இறைமகனாக ஏற்றுக்கொண்டார்கள் என்றும் அதன்பிறகே செபமாலை சொல்லும் பழக்கம் மக்களிடத்தில் அதிகமாகக் காணப்பட்டது என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
ஆலன் ரோச் என்ற புனிதர் செபமாலை சொல்வதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பது பற்றி மக்களிடத்தில் எடுத்துக் கூறியதாகவும், 1571 ஆம் ஆண்டு கிறிஸ்தவர்கள் இஸ்லாமியப் படையை செபமாலையின் துணைகொண்டு வெற்றிகொண்டதாகவும் அதன் காரணமாகவே 1715 ஆம் ஆண்டு செபமாலை அன்னையின் விழா உரோமைத் திருஅவை விழா அட்டவணையில் சேர்க்கப்பட்டது என்றும் வரலாறு கூறுகின்றது .
இத்தகைய பெருமை மிகுந்த செபமாலை அன்னையின் வரலாறு உருவான விதம், காரணம், மற்றும் சூழல் பற்றிய செய்திகளை நம்மிடம் பகிர்ந்துகொள்பவர், கோயம்புத்தூர் மறைமாவட்ட அருள்பணி. ஆரோக்கிய பிரதீப் அவர்கள். பெங்களூருவில் சட்டப்படிப்பு முடித்த தந்தை அவர்கள், தற்போது ஈரோடு மாவட்டத்திலுள்ள சீமாவில் பங்குப்பணியாற்றியவாறே கோயம்புத்தூர் மறைமாவட்டத்தின் சொத்துக் கண்காளிப்பாளராகவும் பணியாற்றி வருகின்றார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்