அகில உலக மறைபரப்பு ஞாயிறு அக்டோபர் 23. 2022 அகில உலக மறைபரப்பு ஞாயிறு அக்டோபர் 23. 2022  

நேர்காணல்- அகில உலக மறைபரப்பு ஞாயிறு.

செங்கல்பட்டு மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணியாளர் முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்கள், திருத்தந்தையின் இந்திய மறைத்தூதுப் பணியகத்தின் தேசிய இயக்குனர் மற்றும் இந்திய லத்தீன் வழிபாட்டு முறை ஆயர்பேரவையின் மறைபரப்பு பணிக்குழுச் செயலர் ஆவார்.
அகில உலக மறைபரப்பு ஞாயிறு. அருள்பணியாளர் முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து.

மெரினா ராஜ் - வத்திக்கான்

நீங்கள் என் சாட்சிகளாய் இருப்பீர்கள்'  என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின்  கருத்துடன்  இவ்வாண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி சிறப்பிக்கப்படவுள்ள மறைபரப்பு ஞாயிறு,  கிறிஸ்துவின் மீட்பு தரும் நற்செய்தியை கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கை நடவடிக்கையின் வழியாக எடுத்துரைக்க வேண்டும் என அழைப்பு விடுக்கின்றது. கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும்  அவர் பற்றிய நற்செய்தியை அறிவிக்கவே இவ்வுலகில் படைக்கப்பட்டிருகின்றோம் என்பதை உணர்ந்து செயல்பட இந்நாள் நமக்கு வலியுறுத்துகின்றது.

கிறிஸ்துவுக்குச் சான்று பகர்தல், உலகின் எல்லை வரை சென்று பணியாற்றுதல், தூய ஆவியின் வல்லமையைப் பெறுதல் போன்ற மூன்று அடித்தளங்களைக் கொண்டுசிறப்பிக்கப்படும் மறைபரப்புப் பணி,இயேசுவின் சீடர்கள் ஒவ்வொருவரின் வாழ்வை நமதாக்க வலியுறுத்துகின்றது. இத்தகைய சிறப்பு பொருந்திய நாளைப் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொள்ள வந்துள்ளார் திருத்தந்தையின் இந்திய மறைத்தூதுப் பணியகத்தின் தேசிய இயக்குனர் மற்றும் இந்திய லத்தீன் வழிபாட்டு முறை ஆயர்பேரவையின் மறைபரப்பு பணிக்குழு செயலர் அருள்பணியாளர் முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்கள். செங்கல்பட்டு மறைமாவட்டம் .

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 October 2022, 12:23