புனித பூமியின் அருள்பணியாளர் Nikodemus Schnabel புனித பூமியின் அருள்பணியாளர் Nikodemus Schnabel  

கடவுளுக்கு நெருக்கமான இஸ்ரயேல் புலம்பெயர்ந்தோர்

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும்பாலும் வீட்டு வேலை வேளாண்மை மற்றும் கட்டுமானப்பணி செய்பவர்களாக இருக்கின்றார்கள்

மெரினா ராஜ் -வத்திக்கான்

ஓரங்கட்டப்படுதல், மற்றும் பாகுபாட்டினால் அடிக்கடி துன்புறும் புலம்பெயர்ந்தோர், கடவுளுடன் உண்மையான நெருக்கத்தைக் கொண்டவர்கள் என்றும்,  நம்பிக்கை கொண்டு அனைவரையும் சகோதர சகோதரிகளாக பார்க்கும் குணம் படைத்தவர்கள் என்றும், புனித பூமியின் அருள்பணியாளர் Nikodemus Schnabel தெரிவித்துள்ளார். 

எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தையர் பிரதிநிதியாக   புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடம் தேடுவோர்க்கான அமைப்பிற்கு பொறுப்பேற்றுள்ள  பெனடிக்ட்துறவற சபை அருள்பணியாளர் Nikodemus Schnabel  அவர்கள், இஸ்ரயேலின் புனித பூமியில் புலம்பெயர்ந்துள்ள கத்தோலிக்கர்கள் பற்றி வத்திக்கான் செய்திகளுக்கு கூறியபோது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சைப்ரஸ், இஸ்ரயேல், யோர்தான், பாலஸ்தீனம், மற்றும் எபிரேய மொழி பேசும்  ஒரு இலட்சம் கிறிஸ்தவ புலம்பெயர்ந்தோர்களைக் கொண்ட புனித பூமியில்  வாழ்கின்ற மக்கள் அகதிகள் அல்ல மாறாக புகலிடம் தேடுபவர்கள், நம்பிக்கையுடன் முன்னேறும் வாழ்க்கையுடையவர்கள், மற்றும் கடவுள் மீது நெருக்கம் கொண்டவர்கள் என்பதை ஒவ்வொரு நாளும் இணையம் வழியாக ஒன்றிணைந்து செபிப்பதில் வெளிப்படுத்துகின்றனர் எனவும், அருள்பணியாளர்  Schnabel தெரிவித்துள்ளார்

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும்பாலும் வீட்டுவேலை, வேளாண்மை மற்றும் கட்டுமானப்பணி செய்பவர்களாக இருக்கின்றார்கள் எனவும், ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து சிலர் தங்குவதற்கு அதிகாரப்பூர்வமாக அனுமதி பெற்று வருகின்றார்கள் எனவும் பெண்கள் மற்றும் சிறார் பாதுகாப்பிற்கென பராமரிப்பு மையங்கள் பல்வேறு சமய பெண்களின் துணையால் தொடங்கப்பட்டு நன்முறையில் செயல்பட்டு வருகின்றன எனவும், போர் வன்முறை போன்றவற்றால் பாதிக்கப்பட்டு புகலிடம் தேடி வந்திருக்கும் அவர்களுக்கு ஆன்மீக வழிகாட்டுதல்கள், உளவியல் மற்றும் சமூக அக்கறை கொடுக்கப்படுகின்றது எனவும் கூறியுள்ளார் அருள்பணியாளர் Schnabel .

சைப்ரஸ், இஸ்ரயேல், யோர்தான், பாலஸ்தீனம், மற்றும் எபிரேய மொழி பேசும்  ஒரு இலட்சம் கிறிஸ்தவ புலம்பெயர்ந்தோர்களைக் கொண்ட   ஆறாவது  மிகப்பெரிய பகுதியான புனித பூமி  ஏராளமான தொழிலாளர்களையும், 90 விழுக்காடு சட்டவிரோதமாக நுழைந்தவர்களையும் கொண்டுள்ளது.

இங்குள்ள பெரும்பாலான மக்கள் எரித்திரியா மற்றும் எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர்களாவர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 October 2022, 14:54