நைஜிரிய கிராமங்களில் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கிறிஸ்மஸ் தினத்தன்று, நைஜீரியாவின் Angwan கிராமத்தில் தீவிரவாதிகளால் 50க்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டதும், ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதும் தனக்கு மிகவும் துயரத்தை அளித்துள்ளது என்று கூறியுள்ளார் அந்நாட்டின் அருள்பணியாளர் Justine John Dyikuk
ஜனவரி 10, இச்செவ்வாயன்று, இத்துயரச் சம்பவம் குறித்து ஆப்பிரிக்காவின் ACI செய்திக்கு வழங்கிய நேர்காணலின்போது இவ்வாறு தெரிவித்துள்ள அருள்பணியாளர் Dyikuk அவர்கள், தான் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலும்கூட மக்கள் இன்னும் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில்தான் இருக்கின்றனர் என்றும் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
டிசம்பர் 18, 2022 ஞாயிற்றுக்கிழமையன்று, Mallagum மற்றும் Kagoro கிராமங்களில் ஏறத்தாழ 40 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும், 102 வீடுகள் மற்றும் அறுவடை செய்யப்பட்ட தானியங்கள் எரிக்கப்பட்டன என்று அதனை நேரில் கண்டவர்கள் தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார் அருள்பணியாளர் Dyikuk
கிறிஸ்தவர்கள் என்பதற்காக அவர்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் பொருளாதார ரீதியாக மாநிலத்தின் பகுதிகளைத் துண்டிக்க விரும்புவதாகவும், இவ்வாண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாகத் தெற்கு கடுனா மக்களைப் பயங்கொள்ளச் செய்யவேண்டும் என்பதற்காகவும், இக்காரியத்தைச் செய்திருக்கிறார்கள் என்று அம்மக்கள் கருதுவதாகக் கூறியுள்ளார் அருள்பணியாளர் Dyikuk
கடந்த 2009-ஆம் ஆண்டிலிருந்தே ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய இஸ்லாமிய குழுக்களில் ஒன்று மத மற்றும் அரசியல் குழுக்கள் மற்றும் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்