வெள்ளப்பெருக்கால் சூழப்பட்டுள்ள பிலிப்பீன்ஸ் Jipapad town, Samar மாவட்டம் வெள்ளப்பெருக்கால் சூழப்பட்டுள்ள பிலிப்பீன்ஸ் Jipapad town, Samar மாவட்டம்   (AFP or licensors)

வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காரித்தாஸ் உதவி

கந்தாரா நகரில் உள்ள 17,000 நபர்கள் வெள்ளப்பெருக்கினால் வீடுகளை இழந்து வேறு தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

பிலிப்பீன்ஸில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிலிப்பீன்ஸ் காரித்தாஸ் உதவி வருவதாகவும் அருள்பணி Edwin Gariquez  அவர்கள் தெரிவித்துள்ளார்.

சனவரி 11 புதன் கிழமை முதல் பிலிப்பீன்ஸின் மத்தியப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதைக்குறித்து உகான் செய்திகளுக்கு இவ்வாறு கூறியுள்ளார் பிலிப்பீன்ஸ் காரித்தாஸ் நிர்வாகச் செயலர் அருள்பணி Edwin Gariquez

விவசாயிகளுக்கு மாடுகளை வாங்குவதற்கு பணம் கடனாகக் கொடுக்கும் அமைப்புக்கள் தங்களிடம் உள்ளது என்றும், கால்நடைகளை வளர்த்து அவற்றின் எண்ணிக்கையை அதிகரித்து விற்பதன் வழியாகக் கடனை அவர்களால் திருப்பிச் செலுத்த முடியும் என்றும் கூறியுள்ளார் அருள்பணி Edwin.

மேலும், ஞாயிறு காணிக்கையை பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பயன்படுத்தி வருவதாகவும்,  ஏப்ரல்-மே மாதத்தில் அறுவடைக்காக காத்திருந்த பயிர்களை வெள்ளத்தால் இழந்தவர்களுக்கு நிவாரண நிதிஉதவி வழங்கி வருவதாகவும் அருள்பணி எட்வின் கூறியுள்ளார்.

Samar மாநிலத்தில் உள்ள Visayas பகுதிகளில் பெய்து வரும் கனமழையால்  ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் உடைமைகள் வெள்ளத்தால் மூழ்கி சேதமடைந்துள்ளதாகவும், கந்தாரா நகரில் உள்ள 17,000 நபர்கள் வேறு தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பேரிடர் மீட்புப்பணியின் தலைவர் Camilo Ligayo தெரிவித்துள்ளார்.     

மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ அதிகாரி ஜெர்ரி பலாசியோ, மற்றும் வடக்கு சமரில் உள்ள கேட்டர்மன் பகுதியில் வசிக்கும் கோமஸ் ரெய்ஸ் ஆகியோர் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததாகவும் கவலையுடன் Ligayo அறிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 January 2023, 14:48