வெட்டுக்கிளிகளால் நிரம்பிய எகிப்து வெட்டுக்கிளிகளால் நிரம்பிய எகிப்து 

தடம் தந்த தகைமை – வெட்டுக்கிளிகளால் ஏற்பட்ட பாதிப்பு

கல்மழைக்குத் தப்பி எஞ்சி நிற்பதையும், வயல்வெளியில், தளிர்விடும் மரங்கள் அனைத்தையும் வெட்டுக்கிளிகள் தின்றழிக்கும் என்றார் ஆண்டவர்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் மீண்டும் சென்று இஸ்ரயேல் மக்களை அனுப்ப அனுமதிக்குமாறு கேட்டனர். எவ்வளவு காலம் நீ கடவுளுக்கு  பணிய மறுப்பாய்? வழிபாடு செய்யும்படி மக்களைப் போகவிடு. நீ அனுப்ப மறுத்தால், நாளைய தினமே உன் எல்லைகளுக்குள் வெட்டுக்கிளிகளை ஆண்டவர் வரச்செய்வார் என்று கூறினர் மோசேயும் ஆரோனும். யாருமே தரையைப் பார்க்கமுடியாத அளவுக்கு அவை உன் நாட்டை நிரப்பிவிடும். கல்மழைக்குத் தப்பி எஞ்சி நிற்பதையும், வயல்வெளியில், தளிர்விடும் மரங்கள் அனைத்தையும் அவை தின்றழிக்கும், அலுவலர் வீடுகள், மற்றும் எகிப்தியர் அனைவரின் வீடுகளும் வெட்டுக்கிளிகளால் நிரம்பும். உன் தந்தையரும் உன் தந்தையரின் தந்தையரும் இந்நாட்டில் வாழத் தொடங்கிய நாள்முதல் இன்று வரை கண்டிராத ஒன்றாக அது இருக்கும் என்று எடுத்துரைத்தனர். இதனால் கலங்கிய பார்வோன் மன்னம் மனமிரங்கி இஸ்ரயேல் மக்களில் ஆண்கள் மட்டும் சென்று வழிபாடு செய்ய அனுமதி அளித்தார். எனவே ஆண்டவர் கோபமுற்று மோசேயை நோக்கி, “கல் மழைக்குத் தப்பி நாட்டில் நிற்கும் எல்லாப் பயிர் பச்சைகளையும் தின்று தீர்க்க எகிப்து நாடெங்கும் வெட்டுக்கிளிகள் வரும்படியாக எகிப்து நாட்டின் மேல் உன் கையை நீட்டு” என்றார். மோசே எகிப்து நாட்டின்மேல் தம் கையிலுள்ளல் கோலை நீட்டவே, மிகப்பெருந்திரளான வெட்டுக்கிளிகள் எகிப்து நாடெங்கும் வந்திறங்கி எகிப்தின் மூலைமுடுக்கெல்லாம் பரவின. அவை நாடெங்கும் நிரம்பிவிட்டதால், நாடே இருள் நிறைந்ததாக் இருந்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 February 2023, 12:55