திருத்தந்தையுடன் Vilnius பேராயர்  Gintaras Grušas திருத்தந்தையுடன் Vilnius பேராயர் Gintaras Grušas  

கிறிஸ்தவர்கள் அமைதியைக் கட்டியெழுப்புபவர்களாகச் செயல்பட

உக்ரைன் நாட்டின் மீதான தாக்குதலினால் துயர்களை அனுபவிக்கும் மக்களோடு ஒருமைப்பாட்டை அறிவிக்கும் ஐரோப்பிய திருஅவை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்குக் கொணர அனைத்துலக நாடுகளும் தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என மீண்டும் ஒருமுறை அழைப்பு விடுத்துள்ளார் ஐரோப்பிய ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் Gintaras Grušas.

இரஷ்யாவால் துவக்கப்பட்டு ஒராண்டைத் தாண்டி இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கும் உக்ரைன் நாட்டின் மீதான தாக்குதலினால் துயர்களை அனுபவிக்கும் மக்களோடு ஒருமைப்பாட்டை அறிவிப்பதாகவும், உக்ரைன் மக்களுக்கு உதவுவதற்கென ஒன்றிணைந்து உழைப்பதாகவும் அறிவித்தார் பேராயர்.

அனைத்துலகச் சட்டங்கள் காலில் இட்டு நசுக்கப்படும் இன்றையை சூழலில் அனைத்து கிறிஸ்தவர்களும் அமைதியைக் கட்டியெழுப்புபவர்களாக செயல்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பேராயர் Grušas அவர்கள்,  உலக அமைதியை கட்டியெழுப்புவதில் ஐரோப்பாவின் முக்கியப் பங்கையும் வலியுறுத்தினார்.

பல்வேறு நாடுகளில் தலத்திருஅவை அதிகாரிகளும் கத்தோலிக்கர்களும், உக்ரைனிலிருந்து குடிபெயர்ந்தோரை வரவேற்று அவர்களோடு பணியாற்றி வருவதையும் பாராட்டினார் ஐரோப்பிய ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் Grušas. (ICN).

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 February 2023, 14:43