ஸ்டான் சாமிக்கு நீதி வேண்டி நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கம்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இந்திய நாட்டில் கடுமையான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலி தேசத்துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தந்தை ஸ்டான் சுவாமி மற்றும் பிறருக்கு நீதி வழங்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் இயேசு சபை அருள்பணியாளர் Thomas Kavala
மறைந்த இயேசு சபை அருள்பணியாளர் ஸ்டான் சுவாமி மற்றும் மத்திய அரசு தாக்கல் செய்த தேசத்துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நீதி கோரி 3,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நடத்திய கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றபோது இவ்வாறு கூறியுள்ளார் அருள்பணியாளர் Kavala
NIA எனப்படும் இந்திய புலனாய்வு அமைப்பால் தந்தை ஸ்டான் சுவாமி வேண்டுமென்றே வழக்கில் சிக்கவைக்கப்பட்டார் என்பது இப்போது தெளிவாகிறது என்று கூறியுள்ள அருள்பணியாளர் Kavala அவர்கள், இந்தப் பொய் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று மார்ச் 1 இப்புதனன்று யூகான் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
தந்தை ஸ்டான் சுவாமி உட்பட நிரபராதிகள் மீது சுமத்தப்பட்டுள்ள பொய் வழக்குகளை கைவிடுமாறும், இந்தப் பொய் வழக்கின் பின்னணியில் செயல்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் முறையிட விரும்புகிறோம் என்றும் கூறியுள்ளார் அருள்பணியாளர் Kavala.
84 வயதான தந்தை ஸ்டான் சுவாமி, வயது தொடர்பான பல்வேறு நோய்களால் அவதிப்பட்ட போதிலும், ஜாமீன் மறுக்கப்பட்ட பின்னர், ஜூலை 5, 2021 அன்று, மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்