தாய்பெய் 2023 பன்னாட்டு புத்தகக் கண்காட்சி
மெரினா ராஜ் – வத்திக்கான
2023 ஆம் ஆண்டிற்கான பன்னாட்டு புத்தகக் கண்காட்சி தாய்பெய் இல் உள்ள உலக வர்த்தக மையத்தில் உள்ளூர் கத்தோலிக்க தலத்திருஅவையின் பங்கேற்புடன் நடந்து நிறைபலன்களை தந்துள்ளது என்று தெரிவித்துள்ளார் அருள்பணி Philip Huang Zhaoming.
அண்மையில் நடந்த தாய்பெய் புத்தகக் கண்காட்சியில் நடைபெற்ற கலாச்சார நிகழ்வு 5,05,000 பார்வையாளர்களை ஈர்த்தது என்றும், நம்பிக்கை மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையின் அனுபவக்கதைகளை மக்களுக்கும், நற்செய்தி அறிவிப்புடன் தொடர்பு கொள்ளாத பல இளையோர்க்கும் வழங்கியதாக கூறியுள்ளார் கண்காட்சியை திறந்துவைத்த தாய்வான் ஆயர்பேரவை சமூகத்தொடர்புக் குழுவின் தலைவர் அருள்பணி Philip Huang Zhaoming.
லிஸ்பனில் நடக்கவிருக்கும் உலக இளையோர் நாள் 2023 பற்றிய தகவல்களும் கண்காட்சியின் கத்தோலிக்க புத்தகப்பிரிவு அறையில் தாய்வான் இளையோர்க்கு வழங்கப்பட்டது என்றும், "விருந்தினர் நாடாக பங்கேற்ற போலந்து நாட்டு மறைப்பணியாளர்கள் கண்காட்சிக்கு பெரிதும் உதவியுள்ளார்கள் என்றும் கூறியுள்ளார் அருள்பணி Philip
போலந்து நாட்டிலிருந்து வந்திருந்த அறிஞர்கள் கத்தோலிக்க நம்பிக்கை மற்றும் அன்னைமரியாவின் மீதான போலந்தின் ஆழமான பக்தித்தொடர்பை விளக்கினார்கள், என்றும் தாய்வான் பேராயர் Thomas Chung Anzu அவர்கள் கண்காட்சியின் தொடக்கவிழாவில் நடைபெற்ற திருப்பலியில் பங்கேற்றார் என்றும் தெரிவித்துள்ளார் அருள்பணி Philip
புத்தகக் கண்காட்சி நிகழ்வுகள்
தாய்பெய் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற இக்கண்காட்சியில் 811 கலைநிகழ்ச்சிகள், 5,05,000 பார்வையாளர்களை 6 நாட்களில் கவர்ந்துள்ளது. 33 நாடுகளைச் சார்ந்த 470 படைப்பாளர்களின் புத்தகங்கள், 23,450 மீட்டர் பரப்பளவில், 1393 அறைகளில் வைக்கப்பட்டிருந்தன. 130 பள்ளிகளைச்சார்ந்த ஏறக்குறைய 2500 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், 23 பன்னாட்டு சமூக தொடர்பு ஊடக பணியாளர்கள், 432 பன்னாட்டு விருந்தினர்கள் பங்கேற்றனர். (Fides)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்