புலம்பெயர்ந்தோர் புலம்பெயர்ந்தோர்   (AFP or licensors)

புலம்பெர்ந்தோருக்கே திருஅவையின் முன்னுரிமை

புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோரின் உயிரைக் காப்பாற்றுவதும் அவர்களின் மனித மாண்பை பாதுகாப்பதும் தான் தலைதிருஅவையின் முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

தேவைப்படும் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள மக்களைச் சென்றடைவதற்கான ஒரு பணிக்காக அனைத்து நம்பிக்கையாளர்களுடனும் பங்கேற்பு மற்றும் ஒற்றுமையுடன் கூடிய ஒரு திருஅவையை ஆயர்கள் மாமன்றம் வேண்டுகிறது என்று கூறியுள்ளார் ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் துணைச் செயலாளர், பேரருள்திரு Fabio Baggio

மார்ச் 12 முதல் 14 வரை பெங்களூரு மேய்ப்புப் பணி நிலையத்தில் நடைபெற்ற புலம்பெயர்ந்தோருக்கான இந்தியாவின் தேசிய ஆணையத்தின் கத்தோலிக்க ஆயர் பேரவையின் மாநாட்டில் உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த பேரருள்திரு Baggio அவர்கள், ஒருங்கிணைந்த பயணம் தொடர்பான (Synodality) திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் எதிர்பார்ப்புகளையும் விருப்பத்தையும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

பெருந்தொற்று மற்றும் பொருளாதார மந்தநிலையின் பின் விளைவுகளால் சரி செய்ய முடியாத அளவிற்குப் பேரழிவிற்குள்ளான இந்தியாவில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சனைகள் மற்றும் போராட்டங்களை தலத்திருஅவைத் தலைவர்கள் கண்டுணர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"இந்தியாவின் பன்முகக் கலாச்சாரச் சூழலில் புலம்பெயர்ந்தோரின் பராமரிப்பு: ஒரு சினோடல் (synodal) வழி." என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த இரண்டு நாள் மாநாட்டில், புலம்பெயர்ந்தோருக்கான பணிகள் என்பது, அவர்களைச் சார்ந்து வாழச் செய்வது அல்ல, மாறாக, அவர்களைச் சாத்தியமானவர்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது என்றும் எடுத்துக்காட்டப்பட்டது.

புலம்பெர்ந்தோரை வரவேற்பதன், பாதுகாப்பதன் மற்றும், ஊக்குவிப்பதன் வழியாகவும்,  அவர்களை  ஒருங்கிணைப்பதன் வழியாகவும், புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தவர்கள் அனைவரும் தாங்களும் மனித மாண்புடனும், சுதந்திரத்துடனும் வாழ்வதாக உணர வேண்டும் என்றும் இம்மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோரின் உயிரைக் காப்பாற்றுவதும் அவர்களின் மனித மாண்பை  பாதுகாப்பதும் தான் தலத்திருஅவைகளின் முன்னுரிமையாக இருக்கவேண்டும் என்றும், இவர்களைக் கவனித்துக்கொள்ளும் விதமாகத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ள படிப்பினைகள் மற்றும் வழிகாட்டல்கள் திறம்பட எடுத்துக்கொள்ளப்பட்டு, தலத்திருஅவைகளின் பல்வேறு திட்டங்களில் அவைகள் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்றும் இம்மட்டில் வலியுறுத்தப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 March 2023, 14:20