நேர்காணல் – இறையழைத்தல் என்னும் இறைவனின் அருள்கொடை
மெரினா ராஜ் - வத்திக்கான்
அழைக்கப்பட்டோர் பலர் தேர்ந்தெடுக்கப் பட்டோர் சிலர். அன்புப்பணி செய்ய ஆண்டவனிடமிருந்து வரும் அற்புத வாய்ப்பு அழைப்பு. ஒவ்வொருவரின் அழைப்பும் ஒராயிரம் அர்த்தம் சொல்லும் சிலருடைய அழைப்பு நம்முடைய வாழ்விற்கு வழி சொல்லும். இத்தகைய சிறப்பு மிக்க இறையழைத்தலை கத்தோலிக்கத் திருஅவையானது உயிர்ப்புக் காலத்தின் நான்காம் ஞாயிறன்று, இறையழைத்தல்களுக்காக இறைவேண்டல் செய்யும் ஞாயிறாக சிறப்பித்து வருகின்றது. நல்லாயன் ஞாயிறு என்று அழைக்கப்படும் இந்த இறையழைத்தல் ஞாயிறன்று, திருஅவையில், அருள்பணித்துவ மற்றும், துறவு வாழ்வுக்கு, நிறைய இளம் உள்ளங்கள் தங்களையே அர்ப்பணிக்க திருஅவை சிறப்பாகச் செபிக்கின்றது. அவ்வகையில் ஏப்ரல் 30ஆம் நாள் சிறப்பிக்கப்பட இருக்கும் இறையழைத்தல் ஞாயிறை முன்னிட்டு இறையழைத்தல் என்னும் இறைவனின் அருள்கொடை பற்றி நேர்காணல் வழியாக நம்முடன் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்பவர் அருள்பணி. பேட்ரிக் பால். சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தை சார்ந்த அருள்பணி பேட்ரிக் பால் அவர்கள், தனது 8 ஆண்டுகள் குருத்துவ வாழ்வில் உதவி பங்குத்தந்தையாக (2 ஆண்டுகள்), இளங்குருமட உதவி இல்லத்தந்தையாக (1 ஆண்டு) ஆன்மிகவியல் குருமட நெறியாளராக (1 ஆண்டு) பேராயரின் செயலராக (4 ஆண்டுகள்) பணியாற்றியவர். தற்போது உரோமில் உள்ள உர்பானோ பல்கலைக்கழகத்தில் அறநெறி இறையியல் பிரிவில் மேற்படிப்பு பயின்று கொண்டிருப்பவர். தந்தை அவர்களை எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்