வெளிநாட்டு உதவிகளை இங்கிலாந்து குறைத்துள்ளதற்கு கண்டனம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
ஆப்ரிக்காவில் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை இங்கிலாந்தில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கெனத் திருப்பிவிட்டதாக அரசு அறிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என கண்டனத்தை வெளியிட்டுள்ளது இங்கிலாந்தின் கிறிஸ்தவ உதவிக்குழு ஒன்று.
வெளிநாட்டில் ஏழ்மையை ஒழிக்கப் பயன்படுத்தவேண்டிய நிதியை உள்நாட்டில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கென ஒதுக்குவது, பேதுருவின் பணத்தை எடுத்து பவுலுக்கு வழங்குவதுபோல் உள்ளது எனக் கூறியுள்ளது இந்தக் கிறிஸ்தவ மனிதாபிமான பணிகளுக்கான குழு.
புதிய நிதி ஒதுக்கல், மற்றும், ஏழை நாடுகளின் கடன் சுமையைக் குறைக்க பெரிய வங்கிகளை வலியுறுத்துவதை விடுத்து, ஏழை நாடுகளுக்கான பணத்தை உள்நாட்டில் செலவிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்கிறது Christian Aid என்ற இந்த இங்கிலாந்து குழு.
புலம்பெயர்ந்தோருக்கென உள்நாட்டிலும் ஐரோப்பாவிலும் 370 கோடி பவுண்டை கடந்த ஆண்டு, அதாவது, 2022ஆம் ஆண்டில் செலவிட்டதாகக் கூறும் இங்கிலாந்தின் நிதி அறிக்கை, ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவின் வளர்ச்சித் திட்டங்களுக்கென, 204 கோடியே 70 இலட்சம் பவுண்டுகளையே செலவிட்டதாகவும் தெரிவிக்கிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்