தென் கொரிய அரசுத்தலைவர்கள் தென் கொரிய அரசுத்தலைவர்கள்   (ANSA)

70ஆவது ஆண்டு நிறைவு ஒப்புரவு மற்றும் ஒற்றுமைக்காக

அமைதிக்கான வழிபாட்டில் போரால் உயிரிழந்த 30 இலட்சம் மக்களையும் காணாமல் போனவர்களையும் நினைவுகூர்ந்து செபிக்க உள்ளார்கள்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

1950 முதல் 1953 வரை தென்கொரியாவை அழித்த போரின் 70வது ஆண்டு நிறைவை தென் கொரிய கத்தோலிக்க சமூகம் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாடு முழுவதும் ஒப்புரவு மற்றும் தேசிய ஒற்றுமைக்காக அர்ப்பணித்துக் கொண்டாட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜூன் 17 சனிக்கிழமை முதல் 25 ஞாயிற்றுக்கிழமை வரை கொண்டாடப்பட உள்ள  ஆண்டு நிறைவானது தென்கொரியாவின் ஆயர்கள் மாநாட்டின் தேசிய நல்லிணக்கக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டு, அனைத்து மறைமாவட்டங்களின் தலத்திருஅவைகள் மற்றும் கத்தோலிக்க அமைப்புக்களில் சிறப்பிக்கப்பட வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு வழிபாட்டு நோக்கத்துடன் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஜூன் 17 அன்று அமைதி மற்றும் ஒற்றுமைக்க்காகவும் 18 ஆம் தேதி அரசியல் தலைவர்களுக்காகவும், 19ஆம் தேதி அணுஆயுதமாக்கல் மற்றும் அணு ஆயுதங்கள் இல்லாத உலகத்திற்காகவும், 20 ஆம் தேதி பொருளாதார தடைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்க்காவும், 21ஆம் தேதி கொரிய தீபகற்பத்தின் நற்செய்திப் பணிக்காகவும், 22 ஆம் தேதி எல்லையால் பிரிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் வட கொரியாவிலிருந்து வெளியேறியவர்களுக்க்காவும், 23ஆம் தேதி ஒப்புரவு மற்றும் தேசிய ஒற்றுமைக்காகவும், 24 அமைதியை ஏற்படுத்துபவர்களுக்காகவும், 25ஆம் நாள் கொரியாவில் போரை முற்றிலுமாக முடிவுக்கு கொண்டு வரவும் சிறப்பிக்கப்பட உள்ளது.

கிறிஸ்தவ தலத்திருஅவைகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் இந்த அமைதிக்கான வழிபாட்டில் போரால் உயிரிழந்த 30 இலட்சம் மக்களையும் காணாமல் போனவர்களையும் நினைவுகூர்ந்து செபிக்க உள்ளார்கள். இறுதி நாளில், ஒவ்வொரு தலத்திருஅவையிலும் சிறப்பு திருப்பலி அமைதிக்கான  சிறப்பிக்கப்பட உள்ளது(FIDES)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 May 2023, 08:26