கர்தினால் Giorgio Marengo. கர்தினால் Giorgio Marengo.  (ANSA)

ஆகஸ்ட் மாதம் 31-செப்டம்பர் 4 வரை மங்கோலியாவில் திருத்தந்தை

திருத்தந்தையின் அருகாமையையும் அக்கறையையும் வெளிப்படுத்தி நிற்கும் திருத்தந்தையின் பயணம் குறித்த அறிவிப்பு மங்கோலிய விசுவாசிகளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 31 முதல், செப்டம்பர் 4 வரை மங்கோலியாவில் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்ற அறிவிப்பு அந்நாட்டு மறைப்பணியாளர்களுக்கும் விசுவாசிகளுக்கும் மகிழ்ச்சி நிறைந்த ஒன்றாக உள்ளது என அறிவித்தார் அந்நாட்டின் முதல் கர்தினால் Giorgio Marengo.

திருத்தந்தையின் மங்கோலியா நாட்டிற்கான திருத்தூதுப்பயணம் குறித்த அறிவிப்பு, ஆழமான மகிழ்ச்சியைத் தருவதாகவும், அருளின் செயல்பாடாகவும் இருக்கிறது என்ற மங்கோலியத் தலைநகர் Ulaanbaatarன் அப்போஸ்தலிக்க நிர்வாகி, கர்தினால் Marengo அவர்கள், திருத்தந்தையின் அருகாமையையும் அக்கறையையும் வெளிப்படுத்தி நிற்கும் இந்த அறிவிப்பு மங்கோலிய விசுவாசிகளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என உரைத்தார்.

மங்கோலியாவில் ஏறத்தாழ 1500 கத்தோலிக்கர்களே வாழ்வதாகவும், இவர்களிடையே 75 மறைப்பணியாளர்கள் சேவையாற்றிவருவதாகவும், 9 வழிபாட்டுத் தலங்கள் இருப்பதாகவும் கூறிய கர்தினால், பிறமதத்தினருடன் மங்கோலியர்கள் மிகச் சுமூகமான உறவைக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 June 2023, 14:16