கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்க்கும் மக்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்க்கும் மக்கள்  (AFP or licensors)

திருஅவை மீது சாகர் மாவட்ட குழந்தை நல அமைப்பு வழக்கு

மே மாதம் மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட இந்த அருள்பணியாளர்கள் பிணையலில் விடுவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருஅவையால் மத்திய பிரதேசத்தில் நடத்தப்படும் ஆதரவற்ற சிறார்களுக்கான இல்லத்தை காவல்துறை மே மாதத்தில் சோதனையிட வந்தபோது காவல்துறையிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகவும், அவர்களை பணிச் செய்யவிடாமல் தடுத்ததாகவும்  இரு அருள்பணியாளர்கள்மீது மத்திய பிரதேச காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள Sagar மறைமாவட்ட Shyampur புனித பிரான்சிஸ் ஆதரவற்ற சிறார் இல்லத்தின் அருகே உள்ள கோவிலின் திருப்பலி மேடையை இழிவுப்படுத்திய காவல்துறையின் செயலை கண்டித்ததற்காக அங்கிருந்த இரு அருள்பணியாளர்களை அடித்து துன்புறுத்தி கைது செய்தது காவல்துறை.

கைது செய்யப்பட்ட அருள்பணியாளர்கள் E. P. ஜோஷி, Naveen Brahmakulam ஆகிய இருவரும் பிணையலில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்கள் மீது புதிய வழக்குகளைப் பதிவுச் செய்துள்ளது மத்திய பிரதேச காவல்துறை.

மே மாதம் 8ஆம் தேதி கைது செய்யப்பட்ட இந்த அருள்பணியாளர்கள் பிணையலில் விடுவிக்கப்பட்ட நிலையில், சாகர் மாவட்ட குழந்தை நல அமைப்பின் அங்கத்தினர் Kleen Rai வழங்கிய புகாரின் பேரில் அருள்பணியாளர்களுக்கு எதிரான வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறார்களிடையேப் பணிபுரியும் மத்திய பிரதேச கத்தோலிக்கத் திருஅவையின் சேவையைத் தடுக்க மாநில மற்றும் ஒன்றிய அரசின் குழந்தை நல அமைப்புக்கள் தொடர்ந்து முயன்று வருவதாகக் குற்றம் சாட்டினார் புனித பிரான்சிஸ் ஆதரவற்றோர் இல்லத்தின் இயக்குனர்  Sinto Varghese. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 June 2023, 14:32