புனித மரிய கொரற்றி புனித மரிய கொரற்றி 

நேர்காணல் – புனித மரிய கொரற்றி திருவிழா

மரிய கொரற்றியின் புனிதர் பட்டமளிப்பு விழாவுக்கு உலகின் பல பகுதிகளிலிருந்தும் 2,50,000 க்கும் மேற்பட்ட மக்கள் உரோமைக்கு வருகை தந்தனர். 20 ஆம் நூற்றாண்டின் புனித ஆக்னஸ் என அழைக்கப்படும் இவரின் விழா சூலை மாதம் 6 ஆம் நாள் சிறப்பிக்கப்படுகின்றது.
நேர்காணல் - அருள்பணி. கார்மேல்

மெரினா ராஜ் - வத்திக்கான்

கல்வி கற்குமளவுக்கு வசதி இல்லாத இத்தாலியின் ஏழைகுடும்பத்தில் பிறந்த மரிய கொரற்றி தனது 12 வயதில், அலெக்சாண்ட்ரோ செரனெல்லா என்ற 18 வயது இளைஞனின் ஆசைக்கு இணங்க மறுத்ததால் 14 முறை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். குற்றுயிராய் விடப்பட்ட மரிய கொரற்றி மருத்துவமனையில் 24 மணி நேரம் உயிருக்குப் போராடி இறந்தார். இறப்பதற்கு முன் தன்னைக் கத்தியால் குத்தியவரை தான் மன்னித்துவிட்டதாகக் கூறினார். இவர் இறந்த 45 ஆண்டுகளுக்குள் திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் இவருக்குப் புனிதர் பட்டம் அளித்தார். இவரது புனித பட்டமளிப்பு விழாவுக்கு உலகின் பல பகுதிகளிலிருந்தும் 2,50,000க்கும் மேற்பட்ட மக்கள் உரோமைக்கு வருகை தந்தனர். 20 ஆம் நூற்றாண்டின் புனித ஆக்னஸ் என அழைக்கப்படும் இவரின் விழா சூலை மாதம் 6 ஆம் நாள் சிறப்பிக்கப்படுகின்றது.

புனித மரிய கொரற்றியின் விழாவினை திருஅவை சிறப்பித்துக் கொண்டிருக்கும் இந்நாளில் அப்புனிதரைப் பற்றியக் கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொள்பவர்  அருள்பணி கார்மேல். தூத்துக்குடி மறைமாவட்டத்தில் உள்ள வீரபாண்டியபட்டணத்தை சார்ந்த அருள்பணி கார்மேல் அவர்கள் தத்துவஇயலை மதுரை கருமாத்தூர் கல்லூரியிலும், இறையியலை சலேசியன் கல்லூரியிலும், இறையியல் கோட்பாடுகள்  மற்றும் விவிவிலிய இறையியலில் மேற்கல்வியை உரோமில் உள்ள உர்பான் பல்கலைக் கழகத்திலும் பயின்றவர் 12 வருடங்கள் செர்மன்ஸ் ஆஃப் சேரிட்டி சபையின் பங்குப்பணியாளராக பணியாற்றிய இவர் உரோமைக்கு அருகில் உள்ள அல்பானோ மறைமாவட்ட அருள்பணியாளராவார். தற்போது இத்தாலியின் நெத்தூனோ என்னும் கடற்கரை பகுதியில் உள்ள புனித லூசியா பங்கு குருவாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றார் தந்தை அவர்களை, புனித மரிய கொரற்றி பற்றிய செய்திகளை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 July 2023, 11:15