புனித பூமியில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
புனித பூமியில் யூத மத அடிப்படைவாதிகளால் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என்றும் அங்குள்ள கிறிஸ்தவர்கள் சிறப்புப் பாதுகாப்பைப் பெற விரும்பவில்லை, ஆனால் அவர்களின் அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார் முதுபெரும்தந்தை பேராயர் Pierbattista Pizzaballa அவர்கள்,
அண்மையில் கர்தினாலாக நியமிக்கப்பட்ட எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை பேராயர் Pizzaballa அவர்கள் வத்திக்கான் செய்திக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ள வேளை, குறிப்பாக எருசலேமில் நிகழும், மதச் சகிப்புத்தன்மையின் இச்செயல்களைத் துன்புறுத்தல்கள் என்று வரையறுக்க முடியாது என்றும் உரைத்துள்ளர்.
இத்தாக்குதல்களின் அதிகரிப்பு கிறிஸ்தவர்களுக்கும், அதேவேளை இஸ்ரேலிய அதிகாரிகளுக்கும் கவலை அளித்துள்ளபோதிலும், இவற்றைத் தடுப்பதில் அவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றிகிடைக்கவில்லை என்று கவலை தெரிவித்துள்ளார் பேராயர் Pizzaballa.
சில தீவிர மதத் தலைவர்களால் தூண்டப்பட்ட வன்முறை மற்றும் பிரிவினை ஆகியவற்றின் சமூக-கலாச்சார சூழலில் வளர்ந்த புதிய தலைமுறை இஸ்ரேலிய குடியேற்றத்தாரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் என்று விளக்கியுள்ளார் பேராயர் Pizzaballa.
இந்நிலை கிறிஸ்தவச் சமூகங்களை மேலும் மேலும் பதற்றமடையச் செய்கிறது என்றாலும், புனித பூமியில் உள்ள கிறிஸ்தவர்கள் சிறப்பு பாதுகாப்புகளை விரும்பவில்லை, ஆனால், ஒரு ஜனநாயக அரசு அனைத்து குடிமக்கள் மற்றும் சமூகங்களுக்கு அவர்களின் மதச் சார்பற்ற தன்மையைப் பொருட்படுத்தாமல் உத்தரவாதம் அளிக்க வேண்டிய அடிப்படை உரிமைகளை மட்டுமே மதிக்க வேண்டும் என்று எடுத்துரைத்துள்ளார் பேராயர் Pizzaballa.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்