கல்தேய வழிபாட்டுமுறை கத்தோலிக்க சபையின் முதுபெரும் தந்தை கர்தினால் லூயிஸ் ரபேல் சாக்கோ கல்தேய வழிபாட்டுமுறை கத்தோலிக்க சபையின் முதுபெரும் தந்தை கர்தினால் லூயிஸ் ரபேல் சாக்கோ   (AFP or licensors)

ஈராக்கின் குர்திஸ்தானிலுள்ள துறவுமடத்தில் வாழ உள்ள கர்தினால்

ஈராக்கில் இடம்பெற்றுவரும் அரசியல் குழப்ப நிலைகளில் நடுநிலையாகச் செயல்படும் கத்தோலிக்க சமூகத்தின் மாண்பைக் கெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

மத்திய கிழக்குப் பகுதியிலுள்ள கல்தேய வழிபாட்டுமுறை கத்தோலிக்க சபையின் முதுபெரும் தந்தை கர்தினால் லூயிஸ் ரபேல் சாக்கோ (Louis Raphaël Sako) அவர்கள், ஈராக் தலைநகரிலிருந்து வெளியேறி ஈராக்கின் குர்திஸ்தானிலுள்ள ஒரு துறவுமடத்தில் வாழ உள்ளதாக அறிவித்துள்ளார்.

கர்தினால் சாக்கோவை கல்தேய வழிபாட்டுமுறையின் தலைவராக 2013ஆம் ஆண்டு அரசுத்தலைவர் Jalal Talabani அவர்கள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்ததை தற்போதைய அரசுத்தலைவர் Abdul Latif Rashid அவர்கள் நீக்கியதைத் தொடர்ந்து, இம்முடிவை எடுத்துள்ளார் கர்தினால் சாக்கோ.

கல்தேய வழிபாட்டுமுறையின் அதிகாரப்பூர்வ இணையபக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த செய்தி, ஈராக்கின் கிறிஸ்தவ சமூகம் எண்ணற்ற துன்பங்களை அனுபவித்துவரும் வேளையில், இத்தகைய ஒரு நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது, வரலாற்றில் இதுவரை காணப்படாத ஒன்று எனத் தெரிவிக்கிறது.

ஈராக்கில் இடம்பெற்றுவரும் அரசியல் குழப்ப நிலைகளில் நடுநிலையாகச் செயல்படும் கத்தோலிக்க சமூகத்தின் மாண்பைக் கெடுக்கும் விதமாக ஈரான் ஆதரவு கிறிஸ்தவ தீவிரவாதிகளின் செயல்பாடுகளையும் அப்பகுதியின் செய்தித் தொடர்பகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 July 2023, 14:56