காட்டுத்தீயின் பாதிப்பில் தலத்திருஅவை ஆலயங்கள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட வடமேற்கு கானடா தலத்திருஅவை ஆலயத்தின் அருள்பணியாளர்கள் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும், துன்பங்கள், விரக்திகள் பல இருந்தபோதிலும், அதன் மத்தியில் மனிதகுலத்தின் சிறப்பைக் கண்டறிய முடிந்தது என்றும் கூறிள்ளார் ஆயர் Jon Paul Christian Hansen.
ஆகஸ்ட் மாதம் 22 செவ்வாய்க்கிழமை வடமேற்குக் கானடாவின் பகுதிகளில் பரவியக் காட்டுத்தீயீனால் தலத்திருஅவையின் ஆலயங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து உகான் செய்திகளுக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார் வடமேற்குக் கானடாவின் Mackenzie-Fort Smith மறைமாவட்ட ஆயர் Jon Paul Christian Hansen.
காற்றினால் பரவிய இத்தீயின் வேகம் அதிகரித்து வரும் வேளையில் வறண்ட இந்த நிலத்திற்கு அதிகமாக மழைப்பொழிவு கிடைக்க செபிக்கவேண்டும் என்றும், கோடை காலம் முழுவதும் ஏற்படும் காட்டுத்தீயிலிருந்து மக்களையும் அவர்தம் உடைமைகளையும் காக்க தீயணைப்பு வீரர்களும் மீட்புப் படையினரும் மிகத்தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்றும் எடுத்துரைத்துள்ளார் ஆயர் ஹேன்சன்.
பாதிக்கப்பட்ட ஆலயத்தின் அருள்பணியாளர்களான Obi Ibekwe மற்றும் Biju Anthony கூறுகையில் ஆலயத்தின் புனிதப்பொருள்கள், அனைத்தும் மீட்கப்பட்டு வேறு இடத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டன என்றும், கடவுள் எப்போதும் நம்மோடு இருக்கின்றார், நமது நன்மைக்காக உழைக்கின்றார் என்று நம்பிக்கைக் கொண்டு நாம் வாழ வேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்புப்படையினர் உணவு நீர் போன்ற அடிப்படைப்பொருள்களை வழங்கி வரும் நிலையில், நகரத்தில் வாழும் மக்கள் துணிவுடன் பணியாற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு உணவு மற்றும் பானங்களை அதிக அளவில் கொடுத்து ஊக்கமூட்டி வருகின்றனர். UCAN
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்