Sant'Egidio குழு ஏற்பாடுச் செய்த அமைதிக்கான கூட்டம் Sant'Egidio குழு ஏற்பாடுச் செய்த அமைதிக்கான கூட்டம் 

Sant'Egidio குழுவின் அமைதிக்கான பல்மத, பன்னாட்டு செபக்கூட்டம்

பொறுமை, பேச்சுவார்த்தை, ஜனநாயக பலம் ஆகியவைகளின் துணைகொண்டு பிரிவினைச் சுவர்களை தகர்த்தெறிந்த பெர்லின் நகரில் அமைதிக்கான பன்னாட்டு செபக்கூட்டம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஜெர்மனியின் பெர்லின் நகரிலுள்ள கத்தோலிக்க மற்றும் எவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபைகளின் துணையுடன் அந்நகரில் செப்டம்பர் மாதம் 10 முதல் 12 வரை அமைதிக்கான பான்னாட்டு கூட்டத்திற்கு ஏற்பாடுச் செய்துள்ளது கத்தோலிக்க பிறரன்பு அமைப்பான Sant'Egidio குழு.

புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் புனித பிரான்சிஸ் அசிசியின் உணர்வுடன் உலக மதங்கள் பங்குபெறும் அமைதிக்கான செபத்துடன் கூடிய பன்னாட்டுக் கூட்டமாக துவக்கப்பட்ட இம்முயற்சியின் 37 வது கூட்டம், தற்போது சான் எஜிதியோ குழுவால் பெர்லினில் நடத்தப்படுகிறது.

அமைதிக்கானப் பாதையைக் கண்டுகொள்வதில் பொறுமை, பேச்சுவார்த்தை, ஜனநாயக பலம் ஆகியவைகளின் துணைகொண்டு பிரிவினைச் சுவர்களை தகர்த்தெறிந்த பெர்லின் நகரில் அமைதிக்கான பன்னாட்டு செபக்கூட்டம் இடம்பெறுவது பொருத்தமானது என உரைத்த சான் எஜிதியோ குழுவின் தலைவர் Marco Impagliazzo அவர்கள், பெர்லினில் இக்கூட்டம் இடம்பெறுவது வருங்காலத்திற்கான ஒரு நமபிக்கையைத் தருவதாகவும் இருக்கும் எனக் கூறினார்.  

அமைதிக்கான இந்த பன்னாட்டு செபக்கூட்டத்தில் 33 நாடுகளில் இருந்து மத மற்றும் கலாச்சாரப் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர். ஜெர்மன் அரசுத்தலைவர், கினி பிசாவ் அரசுத்தலைவர், இஸ்லாமிய உயர் மதக்குரு Ahmed Al-Tayyeb, ஐரோப்பிய யூதமதக் குருக்களின் தலைவர், கர்தினால் மத்தேயு சுப்பி, ஈராக்கின் அசீரியன் முதுபெரும் தந்தை ஆகியோர்களுடன் பல்வேறு கிறிஸ்தவ சபைகள், இஸ்லாம் மற்றும் யூதம் உட்பட பல்வேறு மதங்களின் முக்கியப் பிரதிநிதிகளும், இந்து மற்றும் புத்த மதங்களின் பிரதிநிதிகளும் பங்குபெற உள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 September 2023, 15:22