வடக்குப்பகுதி ஆயர்கள் பேரவையின் இந்திய கத்தோலிக்க பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றோர் வடக்குப்பகுதி ஆயர்கள் பேரவையின் இந்திய கத்தோலிக்க பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றோர் 

கத்தோலிக்க திருஅவையின் முக்கிய பணி புலம்பெயர்ந்தோர் பணி

சண்டிகர் மறைமாவட்ட ஆயர் இக்னேஷியஸ் மஸ்கரேனாஸ் அவர்கள் தலைமையில் இக்கூட்டமானது நடைபெற்றது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

புலம்பெயர்ந்தோரின் மேய்ப்புப் பராமரிப்பு என்பது கத்தோலிக்க திருஅவையின் முக்கிய பணி என்றும், புலம்பெயர்ந்தோர், உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள், தேவையில் இருக்கும் மக்கள் ஆகியோருக்கு எதிராக பாகுபாடு காட்டாமல் பணியாற்றுவது மிக முக்கியம் என்றும் வலியுறுத்தியுள்ளனர் வடக்கு இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை உறுப்பினர்கள்.

கடந்த வாரம் வட இந்தியாவின் சிம்லா சண்டிகர் மறைமாவட்டத்தின் ஆயர் மையத்தில் நடைபெற்ற வடக்குப்பகுதி ஆயர்கள் பேரவையின் இந்திய கத்தோலிக்க பேரவைக் கூட்டத்தில் இவ்வாறு கலந்துரையாடியுள்ளனர் அக்கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள்.

புலம்பெயர்ந்தோர் மேல் காட்டப்படும் அக்கறை, பராமரிப்பு, வரவேற்பு ஆகியவை,  கத்தோலிக்க திருஅவையின் அக்கறை என்றும் புலம்பெயர்ந்தோர் பாதுகாப்பு மற்றும் வரவேற்பு அதிகம் வலியுறுத்தப்பட வேண்டிய ஒன்று என்றும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டன.

ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை, புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர்க்கான உலக நாளாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இவ்வாண்டு 2023 செப்டம்பர் 24 அன்று, இடம்பெயர்வதா அல்லது தங்குவதா என்பதை சுதந்திரமான முறையில் தேர்ந்தெடுத்தல் என்ற கருப்பொருளில் கொண்டாடப்பட இருக்கின்றது.

நாட்டிற்குள் புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோரை வரவேற்றல், பாதுகாத்தல், ஊக்குவித்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் சமூகத்தின் இயல்பான  சூழலில்  அவர்களைக் கொண்டு செல்வதில் உள்ள சவால்கள் மற்றும் தடைகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

சண்டிகர் மறைமாவட்ட ஆயர் இக்னேஷியஸ் மஸ்கரேனாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,  டெல்லியின் கூடோ பேராயர் அனில் ஜே.டி,  ஜம்மு மற்றும் ஸ்ரீநகரின் ஆயர் இவான் பெரேரா, ஜலந்தர் மறைமாவட்ட  ஆயர் அக்னெலோ கிரேசியஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 September 2023, 12:41