மெக்சிகோவில் அமைதிக்காக செபம் மற்றும் உண்ணாநோன்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
மெக்சிகோவில் வன்முறைகளால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள Michoacán மாநிலத்தில் வாழும் மக்கள், நாட்டின் அமைதிக்காக அக்டோபர் 5ஆம் தேதியை செபம் மற்றும் உண்ணாநோன்பின் நாளாக சிறப்பிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் அந்நாட்டு ஆயர் Cristóbal Ascencio García.
மெக்சிகோவின் Apatzingán ஆயரான Ascencio García அவர்கள் மக்களுக்கு விடுத்துள்ள அழைப்பில், நீதியில் அமைதி பிறந்து மெக்சிகோ மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் வாழ இறைவனை நோக்கி மன்றாடுவோம் என விண்ணப்பித்துள்ளார்.
Apatzingán மறைமாவட்டத்தின் அனைத்து அருள்பணியாளர்களும் தங்கள் பங்கு கோவில்களிலும், அனைத்துக் கோவில்களிலும் நற்கருணையை பீடத்தின் மீது வைத்து, அந்நாள் முழுவதும் மக்கள் எந்நேரமும் கோவிலுக்கு வந்து செபம் செய்வதற்கு உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் ஆயர்.
2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, உலகில் மிகவும் வன்முறை நிறைந்த 50 நகர்களுள் 17 மெக்சிகோவில் இருப்பதாக தெரியவந்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் தொடர்புடைய வன்முறைகளால் மெக்சிகோவின் பல பகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்