இந்திய கிறிஸ்தவ மக்கள் இந்திய கிறிஸ்தவ மக்கள்  (AFP or licensors)

பாதிக்கப்பட்டோருக்கு விரைவான நீதி கேட்கும் இந்திய திருஅவை

தென் தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு 18 பழங்குடியின பெண்களை கடத்திய வழக்கில் 217 அதிகாரிகளின் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

திமினா செலின் இராஜேந்திரன் – வத்திக்கான்

ஜூன் 20, 1992 அன்று தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு தேடுதல் நடவடிக்கையின் போது பழங்குடியின பெண்களை கற்பழிப்பு செய்ததற்காக தமிழ்நாடு மாநில காவல்துறை, வனம் மற்றும் வருவாய் துறைகளைச் சேர்ந்த 217 அரசு அதிகாரிகளின் தண்டனையை உறுதி செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

2,000க்கும் மேற்பட்ட யானைகளை வேட்டையாடியதாகவும், 184 பேரைக் கொன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தனக் கடத்தல்காரரான வீரப்பன், கால் நூற்றாண்டுக்கும் மேலாக தென்னிந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா காடுகளில் மறைந்திருந்து வாழ்ந்தார். அவர் கொன்றதில் பாதி பேர் காவல்துறை, மற்றும் வன அதிகாரிகள்.

வாச்சாத்தி கிராம மக்கள், சந்தனக் கடத்தல் கும்பல் கூஸ் முனிசாமி வீரப்பன் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் சந்தேகித்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது காவல்துறை அத்து மீறி செயல்பட்டுள்ளது. வீரப்பன் 2004 இல் காவல்துறையால் கொல்லப்பட்டார்.

இந்த அத்துமீறல் வழக்கில் கடந்த 2011ஆம் ஆண்டு 269 அதிகாரிகளுக்கு மாவட்ட நீதிமன்றம் தண்டனை வழங்கியது, ஆனால் அவர்கள் தருமபுரி மாவட்ட நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டை தொடர்ந்த நிலையில், சுமத்தப்பட்ட குற்றங்களை அதிகாரிகள் செய்திருக்கிறார்கள் என்றும், மேல்முறையீடு செய்ய எந்த தகுதியும் இல்லை என நீதிபதி பி. வேல்முருகன் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தார்.

மேலும், பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட 18 பேருக்கும் தலா பத்து இலட்சம் இந்திய ரூபாய் (சுமார் 12,000 அமெரிக்க டாலர்கள்) இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதில் அப்பாவி பழங்குடிப் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் எதிர்கொள்ளும் வலிகள் மற்றும் சிரமங்களுக்கு பணம் மற்றும் வேலையின் அடிப்படையில் ஈடுசெய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

18 பழங்குடியின பெண்களை கடத்திச் சென்றதற்காக 200க்கும் மேற்பட்ட அரசாங்க அதிகாரிகள் குற்றவாளிகள் என்ற நீதிமன்ற உத்தரவை நாங்கள் வரவேற்கிறோம் என்று இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் பட்டியல் பழங்குடியினர் அல்லது பழங்குடியினருக்கான ஆணையத்தின் செயலர் அருள்பணி நிக்கோலஸ் பர்லா கூறியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவு, உயிர் பிழைத்தவர்களின் நீதியைப் பெறுவதற்கான உரிமையை வலியுறுத்தியுள்ளது என்றும், நீதிமன்றங்கள் நீதி செயல்முறையை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அவர் UCA செய்திகளுக்கு அக்டோபர் 2 அன்று தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதில் தாமதம் குறித்து கவலைப்படுவதாக பர்லா கூறியுள்ளார். மேல்முறையீட்டின் போது, ​​50 குற்றவாளிகள் இறந்துவிட்டதாகவும், நீதி வழங்குவதில் ஏற்படும் தாமதம் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் அச்சத்தில் வாழ வைக்கிறது என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 October 2023, 13:58