இஸ்ராயேலில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள தொன்மை விவிலியம் இஸ்ராயேலில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள தொன்மை விவிலியம் 

தடம் தந்த தகைமை - நெபுகத்னேசருக்கு இஸ்ரயேலின் எதிர்ப்பு

ஆண்டவர் அவர்களது குரலுக்குச் செவிசாய்த்தார்; அவர்களது கடுந்துன்பத்தைக் கண்ணுற்றார்; ஏனெனில், ஆண்டவரது கோவில் முன்னிலையில் மக்கள் பல நாள் நோன்பிருந்தார்கள்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அசீரிய மன்னன் நெபுகத்னேசருடைய படைத்தலைவன் ஒலோபெரின் வேற்றினத்தாருக்குச் செய்திருந்த அனைத்தையும், அவன் எவ்வாறு அவர்களின் கோவில்கள் எல்லாவற்றையும் சூறையாடித் தகர்த்தெறிந்தான் என்பதையும் யூதேயாவில் வாழ்ந்து வந்த இஸ்ரயேலர் கேள்விப்பட்டனர். எனவே, அவன் வருவதை அறிந்து பெரிதும் அஞ்சினார்கள்; எருசலேமைக் குறித்தும் தங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கோவிலைக் குறித்தும் கலங்கினார்கள். அவர்கள் உயர்ந்த மலையுச்சிகளைக் கைப்பற்றி, அங்கு இருந்த ஊர்களைக் காவலரண் செய்து வலுப்படுத்தினார்கள்; அவர்களின் வயல்கள் அண்மையிலேயே அறுவடையாகியிருந்ததால் போருக்கு முன்னேற்பாடாக உணவுப்பொருள்களைச் சேகரித்தார்கள்.

இஸ்ரயேலின் ஆண்கள் யாவரும் கடவுளை நோக்கி மிகுந்த ஆர்வத்துடன் கூக்குரலிட்டார்கள்; நோன்பிருந்து தங்களையே தாழ்த்திக்கொண்டார்கள். அவர்களும் அவர்களுடைய மனைவியர், மக்கள், கால்நடைகள், உடன்வாழ் அன்னியர்கள், கூலியாள்கள், அடிமைகள் ஆகிய அனைவரும் இடுப்பில் சாக்கு உடை அணிந்து கொண்டனர். ஆண்டவர் அவர்களது குரலுக்குச் செவிசாய்த்தார்; அவர்களது கடுந்துன்பத்தைக் கண்ணுற்றார்; ஏனெனில், யூதேயா முழுவதிலும் எருசலேமில் எல்லாம் வல்ல ஆண்டவரது கோவில் முன்னிலையிலும் மக்கள் பல நாள் நோன்பிருந்தார்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 October 2023, 14:22