ஒவ்வொரு புலம்பெயர்ந்தவருக்கும் பொறுப்பேற்றல் அவசியம்
திமினா செலின் இராஜேந்திரன் – வத்திக்கான்
இத்தாலியின் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கான தேசிய நினைவு தினமான அக்டோபர் 3ஆம் தேதி (UISG) புலம்பெயர்வு என்ற தலைப்பில் கொள்கை பரிந்துரைகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பன்னாட்டு பெண் துறவற தலைவர்களுக்கான ஒன்றியத்தின் (UISG) சர்வதேச புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் வலையமைப்பின் ஒருங்கிணைப்பாளரான சகோதரி கார்மென் எலிசா பண்டியோ அவர்கள், கண்ணியத்தையும் நம்பிக்கையையும் தேடுவதற்காக தங்களின் உயிரைப் பணயம் வைப்பவர்களை நாம் புறக்கணிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கு உதவவும், அவர்களின் உரிமைகளுக்கு முழு மரியாதை வழங்கவும், அவர்களின் ஒருங்கிணைப்பை எளிதாக்கவும், சர்வதேச சமூகத்திற்கு பொறுப்பு இருப்பதாக சகோதரி பண்டியோ கூறியுள்ளார்.
கொள்கைப் பரிந்துரைகள், மொழிக் கல்வி, திறன் பயிற்சி, திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களையும், சர்வதேச புலம்பெயர்ந்தோரை ஆதரிப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஐரோப்பாவிற்கு பயணம் செய்தலில் ஆபத்துகள், புலம்பெயர்ந்தோர் சமூகங்களின் ஒருங்கிணைப்பை ஊக்குவித்தல், பகிரப்பட்ட கலாச்சார முயற்சிகளில் ஈடுபடுத்துதல் பற்றிய துல்லியமான தகவல்களின் அவசியத்தையும் அவை எடுத்துக்காட்டியுள்ளதாக கூறியுள்ளார்.
இந்த பரிந்துரைகள் UISGஇன் கூட்டாளிகள் மற்றும், தேசிய அரசாங்கங்கள், அரசுகளுக்கிடையேயான முகமைகள், சர்வதேச மேம்பாட்டு நிறுவனங்கள், சிவில் சமூக அமைப்புகளின் வலையமைப்பு மற்றும் மிகவும் சமமான நிலையான உலகத்தை உருவாக்குவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட அனைத்து நல்லெண்ண நபர்களுக்கும் அனுப்பப்படும் என தெரிவித்துள்ளார் சகோதரி பண்டியோ.
2014 மற்றும் 2022க்கு இடையில் உயிர் இழந்த புலம்பெயர்ந்தோரின் புள்ளிவிவரங்கள் பற்றி குறிப்பிடுகையில், அக்டோபர் 3ஆம் தேதி 2013 ம் ஆண்டு லம்பதோசா கப்பல் விபத்துக்குப் பின்னர் நிறுவப்பட்ட இலாப நோக்கற்ற அமைப்பான கமிட்டியின் தலைவர் தாரேகே ப்ரானே, உலகளவில் 50,000க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் இறந்துள்ளதாகவும், இதேபோல், குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு (IOM) 2022 ஜனவரி மற்றும் டிசம்பர் இடையே மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்காவில் இருந்து குடியேற்ற வழிகளில் கிட்டத்தட்ட 3,800 பேர் இறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளதை மேற்கோள் காட்டியுள்ளார்.
UISG இன் சகோதரி தலைமையிலான உரையாடல்கள் முக்கியமான வளர்ச்சிப் பிரச்சினைகளை பல்வேறு கோணங்களில் பிரதிபலிக்கும் ஒரு மன்றமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், முறையான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தேசிய, மற்றும் உலகளாவிய பரிந்துரைக்கான முன்னுரிமைப் பகுதிகளை அடையாளம் காண UISG அதன் உலகளாவிய வலையமைப்புகளை இரண்டு நாள் கலந்துரையாடலுக்காக ஒன்றிணைக்கும் என்றும், .உலகெங்கிலும் உள்ள ஓரங்கட்டப்பட்ட சமூகங்களை வலுப்படுத்துவதற்கான உத்திகளை அடையாளம் காண்பதன் மூலம் அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்திற்காக வாதிடக்கூடிய ஒரு கூட்டணியை உருவாக்க தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இந்த உரையாடல் உதவும் என்றும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்