தடம் தந்த தகைமை – எலியாவும் பாகாலின் பொய்வாக்கினர்களும்
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஆகாபு எலியாவைக் கண்டதும், “இஸ்ரயேலரிடையே கலகமூட்டுகிறவன் நீதானே?” என்றான். அதற்கு எலியா, “இஸ்ரயேலரிடையே கலகமூட்டுகிறவன் நானல்ல; நீயும் உன் தந்தையின் வீட்டாரும்தான். ஏனெனில், நீங்கள் ஆண்டவரின் கட்டளைகளைப் புறக்கணித்துப் பாகால் பின்னே செல்கிறீர்கள்! இப்போதே ஆளனுப்பி இஸ்ரயேல் மக்கள் அனைவரையும் கர்மேல் மலையில் என் முன்னிலையில் ஒன்று திரட்டு. ஈசபேலின் பந்தியில் உணவருந்தும் பாகாலின் நானூற்றைம்பது பொய்வாக்கினரையும் அசேராவின் நானூறு பொய்வாக்கினரையும் கொண்டுவந்து சேர்” என்றார்.
அவ்வாறே,ஆகாபு இஸ்ரயேல் மக்கள் அனைவரையும் அழைத்தான். பொய்வாக்கினரையும் கர்மேல் மலையில் ஒன்று திரட்டினான். எலியா, மக்கள் அனைவர்முன் சென்று, “எத்தனை நாள் இருமனத்தோராய்த் தத்தளித்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? ஆண்டவர்தாம் கடவுள் என்றால், அவரைப் பின்பற்றுங்கள்! பாகால் தான் என்றால், அவன் பின்னே செல்லுங்கள்!”
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்