காந்தேஸ்வர் மற்றும் தோழர்களின் வாழ்வு ஆன்மிக ஊட்டமளிக்கிறது!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இறைஊழியர்களான காந்தேஸ்வர் டிகல் மற்றும் தோழர்களின் வாழ்க்கை, மிகவும் சவாலான சூழ்நிலைகளிலும் கூட கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பதில் அவர்களின் அயராத அர்ப்பணிப்பையும் ஓர் உள்ளூக்கத்தையும் நம் அனைவருக்கும் அளித்துள்ளதாகக் கூறியுள்ளார் கட்டாக்-புவனேஸ்வர் பேராயர் John Barwa
இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த மிகவும் கொடிய கிறித்தவ துன்புறுத்தலின் போது கொல்லப்பட்ட மறைசாட்சிகளுக்குப் புனிதர் பட்டம் வழங்குவதற்கான வழியை வத்திக்கான் திறந்து வைத்துள்ளதாகக் கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியபோது இவ்வாறு தெரிவித்தார் பேராயர் Barwa
இந்த இறைஊழியர்களின் நினைவாக, நம்பிக்கையின் அடையாளத்தையும், நம்பிக்கை நமக்கு அளிக்கக்கூடிய வலிமையின் நினைவூட்டலையும், இருள் சூழ்ந்த காலங்களில் ஒளியின் கலங்கரை விளக்கத்தையும் நாம் காண்கிறோம் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் பேராயர் Barwa
இவ்விறைஊழியர்களை அருளாளர்களாக்கும் செயல்முறை என்பது, அவர்களின் குறிப்பிடத்தக்க வாழ்க்கை மற்றும் தியாகமிக்க பணிகளை ஒப்புக்கொள்வது மட்டுமல்லாமல், கட்டாக்-புவனேஸ்வர் மற்றும் பிற இடங்களில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு ஆன்மிக ஊட்டமளித்தலின் ஆழமான ஆதாரத்தையும் வழங்குகிறது என்றும் உரைத்துள்ளார் பேராயர் Barwa.
2008-ஆம் ஆண்டு ஒடிசாவின் கந்தமாலில் கிறிஸ்தவர்களைத் தாக்கிய இந்துத்துவா தீவிரவாதிகள் வழிபாட்டுத்தலங்கள், அருள்கன்னியர்களின் துறவு இல்லங்கள் மற்றும் கிறிஸ்தவ இல்லங்களைத் தீயிட்டுக் கொளுத்தியதில் கத்தோலிக்க வேதியர் காண்டேஸ்வர் திகல் மற்றும் 34 பேர் கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கானோர் காடுகளில் தஞ்சமடையவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. (ICN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்