அருள்பணியாளர்கள், துறவிகளுக்கான தேசிய கருத்தரங்கு
மெரினா ராஜ் - வத்திக்கான்
பெங்களூருவில் உள்ள புனித பேதுரு திருப்பீட இறையியல் கல்லூரி மற்றும் கலாச்சார கல்விக்கான ஆசிய மையம் இணைந்து டிசம்பர் மாதத் தொடக்கத்தில் அருள்பணியாளர்கள் மற்றும் இருபால் துறவறத்தாருக்கான தேசிய கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகளை நடத்த உள்ளது.
வருகின்ற டிசம்பர் மாதம் 4 திங்கள் கிழமை முதல் 7 வியாழக்கிழமை வரை நடைபெற உள்ள இந்தக் கருத்தரங்கானது, “திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஒளியின் பார்வையில் இந்திய அருள்பணியாளர்கள் மற்றும் துறவறத்தாருக்கான உருவாக்கம்“ என்ற தலைப்பில் பெங்களூரூவில் உள்ள புனித பேதுரு திருப்பீட இறையியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
பெங்களூரு உயர் மறைமாவட்ட பேராயர் மேதகு பீட்டர் மச்சாடோ, தர்மபுரி மறைமாவட்ட ஆயர் மேதகு இலாரன்ஸ் பயஸ் அவர்கள் தலைமையில் ஆரம்பமாகும் இக்கருத்தரங்கத்தில் பல்வேறு துறவற சபையின் தலைவர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், அருள்முனைவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர்.
உருவாக்கத்திற்குத் தடையாக இருப்பவை மற்றும் அதன் சவால்கள், இக்காலத்திற்கான உள்மன ஆற்றல் உருவாக்கம், திருத்தந்தையின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஒளியின் பார்வையில் செயல்பாடுகளை நடைமுறைப்படுதுதல்,கலாச்சார உலகம், சமூக ஊடகங்கள் வழியாக வெளிப்படுத்தப்படும் இன்றைய தலைமுறையினரின் உணர்வுகள், போன்ற பல்வேறு தலைப்புக்களில் பலர் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோணிசாமி, எலுரூ மறைமாவட்ட ஆயர், மேதகு JEYA RAO POLIMERA , SHIMOGA மறைமாவட்ட ஆயர் மேதகு FRANCIS SERRARO போன்ற பலர் இக்கருத்தரங்கு நாள்களில் திருப்பலி நிறைவேற்றியும், தங்களது சிந்தனைகளைப் பகிர்ந்தும் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்