காசாவில் குண்டு வீச்சு காசாவில் குண்டு வீச்சு   (AFP or licensors)

தலைமுறைகள் முற்றிலுமாக ஒழிக்கப்படும்போது மௌனம் காக்க முடியாது

அக்டோபர் 7ஆம் தேதி முதல் இடம்பெற்றுவரும் மோதலில் 15,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும், 1200 இஸ்ராயேலர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உலகம் முழுவதும் இருந்து கிறிஸ்தவ மனிதாபிமான உதவி நிறுவனங்களும் கிறிஸ்தவத் தலைவர்களும் இணைந்து, Gaza பகுதியின் அமைதிக்கான விண்ணப்பத்துடன் இங்கிலாந்து பிரதமர் Rishi Sunak அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனிய குடும்பங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு வருகின்றார்கள் எனவும், இதற்கு மேல் இனியும் இந்த அழித்தொழிப்புக்கள் வேண்டாம் என உதவுமாறும் அவர்கள் தங்கள் கடிதத்தில் விண்ணப்பித்துள்ளனர்.

பகைமையின் வன்முறைகள் யூதர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே தொடர்ந்து நிலவி வருவது குறித்து தங்கள் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ள கிறிஸ்தவ மனிதாபிமான அமைப்புக்களும் கிறிஸ்தவத் தலைவர்களும், ஒன்றிணைந்து வாழ்ந்த மக்களிடையே இந்த மோதல்கள், மத இணக்கவாழ்வின் முயற்சிகளுக்கு தடையாக இருக்கின்றன எனக் கூறியுள்ளனர்.

காசா பகுதி குடும்பங்களின் தலைமுறைகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவரும்போது எவரும் மௌனம் காக்க முடியாது எனக்கூறும் இந்த கடிதம், மருத்துவமனைகள், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்கள், பள்ளிகள் என பல கட்டிடங்கள் அழிக்கப்படும்போது நல்மனதுடையோரின் இதயங்கள் சுக்குநூறாக உடைந்து கண்ணீர் வடிக்கின்றன என மேலும் கவலையைத் தெரிவிக்கிறது.

அக்டோபர் 7ஆம் தேதி முதல் இடம்பெற்றுவரும் மோதலில் 15,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும், 1200 இஸ்ராயேலர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 December 2023, 14:56