எலியாவிற்கு உணவளிக்கும் வானதூதர் எலியாவிற்கு உணவளிக்கும் வானதூதர் 

தடம் தந்த தகைமை – இஸ்ரயேலில் பஞ்சம் தீர்ந்து போதல்

எலியா கர்மேல் மலையின் உச்சிக்கு ஏறிச் சென்று. அங்கே தரையில் மண்டியிட்டுத் தம் முழங்கால்களுக்கு இடையே முகத்தைப் புதைத்துக்கொண்டார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

கடவுள் நெருப்பின் வழியாக இறங்கி வந்து பலியை ஏற்ற்க்கொண்டதைக் கண்ட மக்கள் அனைவரும் முகங்குப்புற விழுந்து, “ஆண்டவரே கடவள்! ஆண்டவரே கடவுள்!” என்றனர். அப்போது எலியா அவர்களை நோக்கி, “நீங்கள் பாகாலின் பொய்வாக்கினருள் எவனும் தப்பியோடாதபடி அவர்களைப் பிடியுங்கள்” என்றார். மக்கள் அவர்களைப் பிடித்துக்கொடுக்க, எலியா அவர்களைக் கீசோன் ஓடைக்குக் கொண்டுபோய் அங்கே கொன்றார். பின்பு, எலியா ஆகாபை நோக்கி, “நீர் போய் உணவும் பானமும் அருந்துவீர். ஏனெனில், பெருமழையின் ஓசை கேட்கிறது” என்றார். ஆகாபு உணவும் பானமும் அருந்தச் சென்றவுடன், எலியா கர்மேல் மலையின் உச்சிக்கு ஏறிச் சென்று. அங்கே தரையில் மண்டியிட்டுத் தம் முழங்கால்களுக்கு இடையே முகத்தைப் புதைத்துக்கொண்டார்.

பின்பு, அவர் தம் பணியாளனை நோக்கி, “நீ போய்க் கடல் பக்கமாய்ப் பார்” என்றார். அவன் போய்ப் பார்த்து, “ஒன்றும் இல்லை” என்றான். எலியா அவனை நோக்கி, “ஏழுமுறை மீண்டும் சென்று பார்” என்றார். ஏழாம் முறை அவன் சென்று பார்த்து “இதோ, மனித உள்ளங்கையளவு சிறிய மேகம் ஒன்று கடலிலிருந்து எழும்பி மேலே வருகிறது” என்றான். அப்போது எலியா அவனை நோக்கி, “நீ போய் ஆகாபிடம், மழை தடுத்து நிறுத்தாதபடி தேரைப் பூட்டிப் போய்விடும்படி சொல்” என்றார். இதற்கிடையில் வானம் இருண்டது; கார் மேகம் சூழ்ந்தது. காற்று அடித்தது. பெரும் மழை பெய்தது. ஆகாபு தேரில் ஏறி இஸ்ரயேலுக்குச் சென்றான். அந்நேரத்தில் ஆண்டவரின் ஆற்றல் எலியாவின்மேல் வந்திறங்க, அவர் தம் இடையை வரிந்து கட்டிக் கொண்டு, இஸ்ரயேல்வரை ஆகாபுக்கு முன்னே ஓடினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 December 2023, 14:50