திருவருகைக்கால மூன்றாம் ஞாயிறு திருவருகைக்கால மூன்றாம் ஞாயிறு  

நேர்காணல் - நிறைமகிழ்ச்சி தரும் திருவருகைக்கால ஞாயிறு

எவனொருவருவன் உள்ளத்தில் உவகையும் நிறைவும் கொண்டு இருக்கின்றானோ அவனே நிறைமகிழ்வு கொண்டு வாழ்பவன்.
அருள்பணி. பேட்ரிக் பால்

மெரினா ராஜ் – வத்திக்கான்

உதட்டளவில் சிரிப்பதல்ல மகிழ்ச்சி. உள்ளத்தளவில் உவகையுடன் இருப்பதே மகிழ்ச்சி. பற்கள் தெரிய சத்தமாக சிரிப்பவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றார்கள் என்று அர்த்தமில்லை. அவர்கள் சிரிப்பிற்குப் பின் ஓராயிரம் சிதறிய இன்னல்கள் இருக்கும் என்று கூறுவர் அறிஞர் பெருமக்கள். எவனொருவருவன் உள்ளத்தில் உவகையும் நிறைவும் கொண்டு இருக்கின்றானோ அவனே நிறைமகிழ்வு கொண்டு வாழ்பவன். இன்று நம்மில் பலர், வெற்று மகிழ்ச்சியைத் தங்களது வாழ்வாகக் கொண்டு வாழ்கின்றனர். பிறரைப் போல வாழவேண்டும் என்ற எண்ணத்தால் ஆட்கொள்ளப்படுவதால் இத்தகைய மனநிலை கொண்டவர்களாக வாழ்கின்றனர்.

உள்ளமும் உடலும் நலமுடன் இருக்கும் போது நமது வாழ்க்கையும் மகிழ்வாக நிறைவானதாக இருக்கும். இயேசுவின் பிறப்பு மகிழ்வை வரவேற்று நம்மை நாமேத் தயாரித்துக் கொண்டிருக்கும் இத்திருவருகைக்காலத்தில் மூன்றாம் ஞாயிறு குறித்த சிந்தனைகளை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்பணி பேட்ரிக் பால். சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தை சார்ந்த அருள்பணி பேட்ரிக் பால் அவர்கள், உதவி பங்குத்தந்தை, இளங்குருமட உதவி இல்லத்தந்தை, ஆன்மிகவியல் குருமட நெறியாளர், பேராயரின் செயலர் என பல பொறுப்புக்களைத் திறம்பட செய்தவர். தற்போது உரோமில் உள்ள உர்பானோ பல்கலைக்கழகத்தில் அறநெறி இறையியல் பிரிவில் மேற்படிப்பு பயின்று கொண்டிருக்கும் தந்தை அவர்களை திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு பற்றிய கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 December 2023, 11:21