தடம் தந்த தகைமை – வந்து பாருங்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?- இது முதல் சீடர்களின் கேள்வி.
வந்து பாருங்கள், என்பது இயேசுவின் பதில்.
ஒருவரைப் பற்றி ஆழமாகப் புரிய அவரது பின்னணியைத் தெரிந்து கொள்ள வேண்டும். சமூகத்தில் இன்னும் பிரபலமாகாத இயேசு, ஆட்டுக்குட்டி என யோவானால் சுட்டிக் காட்டப்பட்டதால் அவரது பின்புலம் பற்றி அறியும் ஆவல் முதல் சீடர்களுக்குள் எழுந்தது
இயல்பானதே. யோவானின் குழுமத்தைவிட்டு இயேசுவின் சீடரானால் எங்கே தங்குவது, எப்படி வாழ்வது, என்ன கிடைக்கும் என்ற உள்ளரங்க உறுத்தல்களின் வெளிப்பாடே இக்கேள்வி. ஒருவரோடு வாழ்வதல்ல, ஒருவருக்குள் வாழ்தலே உண்மையான சீடத்துவ வாழ்வு. வந்து பாருங்கள் என்ற அழைப்பு ஆய்ந்து அனுபவிப்பதற்கான வாசல் திறப்பு. உண்ணக்கூட நேரமில்லாமல் (மாற் 6:31) தெருத் தெருவாய் அலைந்த இயேசுவுக்குச் சொந்த வீடு, ஆள்பலம், நிதியுதவி, அலுவலகம் என எதுவுமில்லை. விளிம்பு நிலை மக்களுக்கான பணியே அவரது உணவும், உறைவிடமுமானது. அதனோடு ஒட்டி உறவாடி
வாழ்தலே அவரோடு வாழ்தல்.
இறைவா! கடைநிலை மனிதரோடு வாழ்தலே கடவுளாம் உம்மோடு வாழ்தல் என உணர வரம் தாரும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்