தடம் தந்த தகைமை - அடிமைப்படாமல் வாழும் சுதந்திர மனம்
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன். என்கிறது அலகை.
“அகன்று போ, சாத்தானே, ‘உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்’ என்றும் மறைநூலில் எழுதியுள்ளது” என்கிறார் இயேசு.
தனக்குமுன் மற்றவர்கள் தாழ்ப்பணிந்து நடந்துகொள்ள வேண்டும் என்ற தலைக்கன உணர்வு, தரணியில் தலைமை நிலையிலுள்ள ஏறக்குறைய 90 விழுக்காடு பேரையும் தொற்றியுள்ள மனநோய்.
அடுத்தவரைக் காலில் விழச்செய்து அதில் அலாதி சுகம் காணும் அற்பத்தன மனம் கொண்டவர்கள் அருவருப்பானவர்கள். அது அலகையின் அணுகுமுறை என்பதை உணர்த்தும் இச்சொல்லாடல், “உங்களை நான் நண்பர்கள் என்றேன்” (யோவா 15:15) என்ற இயேசுவின் எண்ண ஒளிமுன் ஓடி மறையும் இருள் போன்றது.
தன் பெயர், பணம், பதவி, பட்டத்திற்காக அடுத்தவர் காலில் விழுவோர் தம்மை அடகு வைப்பவர்கள். அது ஒரு தன்னலமிக்கக் கோழைத்தனம். அத்தகையோரிடம் அர்ப்பணம் என்பது வெறும் கனவாகத்தான் இருக்கும். இயேசுவுக்குள் பணி இலக்கு தெளிவாக
இருந்ததால் அலகையின் ஆசை வார்த்தைகள் அவரை அசைக்கவில்லை.
மறைநூல் மேற்கோளைக் காட்டி மனம் ஈர்க்கத் துணிந்த அலகையை அதே மறைநூலாலும் தம் மனவுறுதியாலும் வென்றார் இயேசு.
மிகச்சிறந்த அறிவுடைமை என்பது நாம் மேற்கொள்ளும் செயல்களில் நாம் கொள்ளும் உறுதிப்பாடே.
இறைவா! எவருக்கும் எதற்கும் அடிமைப்படாமல் வாழும் சுதந்திர மனம் தாரும்
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்