சீடர்களுடன் இயேசு சீடர்களுடன் இயேசு 

தடம் தந்த தகைமை – என்னைப் பின்தொடர்ந்து வா

“நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?” என நத்தனியேல் கேட்டதும் “வந்து பாரும்” (யோவா 1:46) என்ற ஒற்றை வார்த்தையால் வாயடைத்தவர் பிலிப்பு.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

பிலிப்பைக் கண்ட இயேசு, “என்னைப் பின்தொடர்ந்து வா” எனக் கூறினார்.

பிலிப் என்ற பெயருக்குக் “குதிரைகளின் அன்பர்” என்று பொருள். பெயருக்கேற்பக் கொஞ்சம் வேகமும் விவேகமும் உள்ளவர். பேதுருவின் ஊரான பெத்சாயிதாவைச் சார்ந்தவர். ஏறக்குறைய பிற இனத்தாரின் கலாச்சாரச் சூழலில் வாழ்ந்தவர். கபடற்ற திறந்த உள்ளத்தவர். எனவேதான் “நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?” என நத்தனியேல் கேட்டதும் “வந்து பாரும்” (யோவா 1:46) என்ற ஒற்றை வார்த்தையால் வாயடைத்தவர். “மாசற்றவராய் நடப்பவரே… ஆண்டவரது கூடாரத்தில் தங்க முடியும்” என நவிலும் திருப்பாடலுக்கு (15:1-2) பிலிப்புவின் அழைப்பு அழகூட்டுகிறது. படிப்பு, பதவி, பட்டம், தகுதி, திறமை, செல்வாக்கு, ஆள்பலம், குடும்பப் பின்னணி என பார்த்து கடவுள் யாரையும் அழைப்பதில்லை. பிலிப்புவிடம் ஒளிந்து ஒளிர்ந்த இரு குணங்களே தம்பால் அழைக்க இயேசுவைத் தூண்டியது.

1. கபடற்ற மனம்: நத்தனியேலுக்கான பதிலும், யோவா 6:7–ல் வரும் 200 தெனாரியத்திற்கு அப்பம் வாங்கும் கணக்கும்.

2. கலந்துரையாடும் பண்பு: இயேசுவைக் காண விரும்பிய கிரேக்கர் பிலிப்புவை அணுக அச்செய்தியை அந்திரேயாவுக்குச் சொல்லி இயேசுவை அணுகிய விதம் (யோவா 12:20-22). நம் அணுகுமுறைகள் ஒவ்வொன்றும் நாம் யார் என்பதை இச்சமூகத்திற்கு எடுத்துச் சொல்பவை.

இறைவா! பல வழிகளில் வரும் உம் அழைப்புக்குப் பதில் கொடுக்கப் பலம் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 January 2024, 13:49