ஜப்பானில் நிலநடுக்கப் பாதிப்புகள் ஜப்பானில் நிலநடுக்கப் பாதிப்புகள்   (ANSA)

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருடன் ஜப்பான் தலத்திருஅவை நெருக்கம்!

ஜப்பானில் புத்தாண்டு தினத்தன்று பிற்பகலில் இடம்பெற்ற 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் இதுவரை 48 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஜப்பானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்காளுக்காகவும் உயிரிழந்தர்வர்களுக்காகவும் தலத்திருஅவை தொர்ந்து இறைவேண்டலில் ஈடுபட்டு வருவதாகக் கூறியுள்ளார் டோக்கியோவின் பேராயர் டார்சிசியோ இசாவோ கிகுச்சி.

இந்த அண்மைய இயற்கைப்பேரிடர் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இவ்வாறு கூறியுள்ள பேராயர் கிகுச்சி அவர்கள், இந்நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்கு முன்பாக, அந்நாட்டு ஆயர் பேரவையால் ஏற்படுத்தப்பட்டுள்ள குழுவொன்று சேதத்தை ஆய்வு செய்யவிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் புத்தாண்டு தினத்தன்று பிற்பகலில் இடம்பெற்ற 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் இதுவரை 48 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

2024-ஆம் ஆண்டின் முதல் நாளின் இருள்சூழ்ந்த வேளையில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், தற்போது ஏறக்குறைய 11,000 துருப்புக்கள் பாதிக்கப்ட்ட பகுதிளுக்குச் சென்றுவிட்டதாகவும், அங்கு, அவைகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளார் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் மினோரு கிஹாரா.

ஜப்பான் இதுபோன்ற இயற்கைப்பேரிடர்களைச் அவ்வப்போது சந்தித்து வருகிறது என்றும், 12 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சுனாமியால் ஏறத்தாழ  20,000 பேர் பலியான வேளை, தானியங்கி செல்போன் எச்சரிக்கைகள் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் வழியாக, இதுபோன்ற நிகழ்வுகளை அறியநேரிடும்போது முன்னதாகவே, கடலோர மக்கள் உயரமான இடங்களுக்கு பாதுகாப்புத் தேடி சென்றுவிடுகின்றனர் என்றும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 January 2024, 12:57