பெத்லகேமில் திருக்காட்சிப் பெருவிழா
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஜனவரி 5 வெள்ளிக்கிழமை காலை புனித பூமியில் உள்ள இராக்கேல் கல்லறை வளாகத்திற்கு அருகில் இருந்து திருக்காட்சி பெருவிழாவிற்கான பவனியானது புனித பூமியின் பொறுப்பாளர் அருள்பணி பிரான்சிஸ்கோ பாட்டன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிலையில் ஜனவரி 6 சனிக்கிழமை திருக்காட்சி பெருவிழா வழிபாடானது எளிய முறையில் நடைபெற்றது.
அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1964ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள் புனித பூமிக்கு மேற்கொண்ட திருப்பயணத்தை நினைவுகூர்ந்த அருள்பணி பாட்டன் அவர்கள், 20 நூற்றாண்டுகளுக்கு முன்பாக அமைதியின் இளவரசராக இங்கிருந்து பிறந்தவர் இயேசு என்றும், புனித பூமியின் இவ்விடம் அமைதியும் தூய்மையும் நிறைந்தது என்றும் எடுத்துரைத்துள்ளார்.
அரசுத்தலைவர்கள், மக்கள் என அமைதியைப் புதுப்பிக்க வேண்டிய கடமை எல்லாருக்கும் உள்ளது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உலக அமைதிக்கான விண்ணப்பத்தை நினைவுகூர்ந்த அருள்பணி பாட்டன் அவர்கள், "உண்மை, நீதி, சுதந்திரம் மற்றும் சகோதர அன்பில் அமைதியை நிலைநாட்ட நாம் எல்லாரும் இணைந்து திறம்பட ஒத்துழைக்க வேண்டும் என்பதனையும் வலியுறுத்தினார்.
கிறிஸ்து பிறந்த இடமாகிய பெத்லகேமில் இருந்து உலக மக்கள் அனைவரும் ஏராளமான கடவுள் உதவிகளைப் பெறவும், அமைதிக்காக நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நிறைவெற்றியடையவும், அவை அனைத்தும் நமது இதயத்தின் முழுமையுடன் இறைவனை சென்றடையவும் சிறப்பாக செபிப்போம் என்று கேட்டுக்கொண்டார் அருள்பணி பாட்டன்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்