அலகை இயேசுவை சோதித்தல் அலகை இயேசுவை சோதித்தல் 

தடம் தந்த தகைமை – அலகைக்கு இயேசுவின் பதில்

இயேசுவுக்கு, 'தன்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே” (யோவா 4:34) அடிப்படை உணவாயிற்று.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படி கட்டளையிடும், என்கிறது அலகை.

மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர் என மறைநூலில் எழுதியுள்ளதே”, என்கிறார் இயேசு

சிந்திக்கும் வழிகள் இரண்டு. 1. சுயநலச் சிந்தனை 2. பொதுநலச் சிந்தனை.

இங்கே அலகையின் வழிகாட்டல் இயேசுவின் பசி அறிந்து வழங்கப்பட்டாலும் அதன் நோக்கம் வேறாக இருந்தது. சுயநலத்தோடு வழங்கப்படும் எதுவாயினும் ஒருவரைச் சூறையாடிவிடும். 40 நாட்கள் உண்ணா நோன்பிருந்த இயேசுவுக்கு உணவு என்பது அடிப்படைத் தேவை. ஆனால் அது அவருக்கு மேலோட்டமான தேவையாகவே தென்பட்டது. அதனினும் மேலானதாக ஆண்டவரின் வார்த்தைகளைப் பார்க்கின்றார்.

'உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது” (மத் 6:25) எனக் கவலைப்பட வேண்டாம் என மொழிந்த இயேசுவுக்குத் 'தன்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே” (யோவா 4:34) அடிப்படை உணவாயிற்று. உணவு உயிரளிப்பது உண்மைதான். ஆனால் அது

விளம்பரத்திற்காகவும், பகட்டிற்காகவும், செல்வாக்கிற்காகவும்

பகிரப்படுகிறதெனில் அதனைப் பார்க்கும் கடவுள் முகம் சுளிக்கிறார்.

இயேசுவின் அப்ப மறுப்பு நிலைப்பாடு, அவரது ஆழ்ந்த அர்ப்பணத்தின் வெளிப்பாடு.

நாம் விரும்புவதைக் கொடுப்பது சுயநலம், பிறர் விரும்புவதைக் கொடுப்பது பொதுநலம்.

இறைவா! எச்சூழலிலும் பொதுநலப் பார்வையோடு வாழும் வலிமை தாரும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 January 2024, 15:53