நிகராகுவாவில் புதிய அருள்பணியாளர்கள் நிகராகுவாவில் புதிய அருள்பணியாளர்கள் 

நிகரகுவாவில் திருப்பொழிவு செய்யப்பட்ட புதிய அருள்பணியாளர்கள்

மனாகுவா உயர்மறைமாவட்ட பேராயரான கர்தினால் Leopoldo José Brenes Solórzano. அவர்களால் திருக்காட்சிப்பெருவிழாவன்று அருள்பணியாளர்களாக திருப்பொழிவு செய்யப்பட்டனர்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

அருள்பணித்துவம் என்பது அதிகாரமல்ல மாறாக அது ஒரு மறைப்பணி, சேவை என்றும்,சான்றுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையின் பணியாளர்கள், நற்புறவு மற்றும் சகோதரத்துவத்துடன் வாழ அழைக்கப்பட்டவர்கள் அருள்பணியாளர்கள் என்றும் கூறினார் கர்தினால் Leopoldo José Brenes Solórzano.

நிகராகுவாவின் மனாகுவா உயர் மறைமாவட்டத்தில் ஒன்பது திருத்தொண்டர்கள், மனாகுவா உயர்மறைமாவட்ட பேராயரான கர்தினால் Leopoldo José Brenes Solórzano. அவர்களால் திருக்காட்சிப்பெருவிழாவன்று அருள்பணியாளர்களாகத் திருப்பொழிவு செய்யப்பட்டனர்.

ஏராளமான கிறிஸ்தவ மக்கள் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் பங்கேற்ற இந்த வழிபாட்டிற்கு தலைமையேற்று திருப்பலியில் மறையுரையாற்றிய போது இவ்வாறு கூறிய கர்தினால் Brenes அவர்கள், புதிய அருள்பணியாளர்களை திருஅவைக்குக் கொடையாகக் கொடுத்த இறைவனுக்கு தன் நன்றியினை தெரிவித்தார்.

கடினமான சூழலில் நிகராமுவாவில் 9 அருள்பணியாளர்கள் திருப்பொழிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி முதல் 14 அருள்பணியாளர்கள், 2 அருள்பணித்துவ மாணவர்கள், iuna மறைமாவட்ட ஆயர் Isidoro Carmen Mora Ortega ஆகியோர் நிகராகுவா அரசினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனவே ஆயர் Isidoro Carmen Mora Ortega கைது செய்யப்பட்டு இதுவரை எங்கு இருக்கின்றார் என்பது அறிவிக்கப்படாத நிலையில் அவர் இருக்கும் இடத்தை தெரிவிக்க வேண்டும் என்றும், அருள்பணியாளர்களும் ஆயர்களும் கைது செய்யப்படுவது மதசுதந்திரம், மனித மாண்பு மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் மத்திய அமெரிக்காவின் ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகம் நிகராகுவா அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 January 2024, 13:12