சூனேம் பெண்ணின் மகன் சூனேம் பெண்ணின் மகன் 

தடம் தந்த தகைமை - எலிசாவும் சூனேமியப் பெண்ணும்

பிள்ளையைத் தூக்கிச் சென்று அதன் தாயிடம் கொண்டுவந்து விட்டான். நண்பகல் வரை அவர் மடியில் கிடந்தபின், அது இறந்து போனது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

எலிசா, சூனேம் பெண்ணின் கணவரிடம் “அவளை இங்கு வரச் சொல்” என்றார். அவ்வாறே, அவன் அவரை அழைக்க, அவரும் கதவருகில் வந்து நின்றார். 16எலிசா அவரை நோக்கி, “அடுத்த ஆண்டு இதே பருவத்தில் உனக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்” என்றார். அதற்கு அவர், “என் தலைவரே, கடவுளின் அடியவரே! உம் அடியவளை ஏமாற்ற வேண்டாம்” என்றார். எலிசா, அப்பெண்ணுக்கு முன்னறிவித்தவாறே அவர் கருவுற்று அடுத்த ஆண்டு அதே பருவத்தில் ஒரு மகனைப் பெற்றெடுத்தார்.

குழந்தையும் வளர்ந்தான். ஒரு நாள் அவன் அறுவடை செய்வோருடன் இருந்த தன் தந்தையிடம் சென்றான். அவன் தன் தந்தையிடம், “ஐயோ! தலை வலிக்கிறது, தலை வலிக்கிறது” என்று சொன்னான். தந்தையும் தம் வேலையாள் ஒருவனிடம், “நீ இவனை இவன் தாயிடம் தூக்கிக் கொண்டு போ” என்றார். அவன் அப்படியே பிள்ளையைத் தூக்கிச் சென்று அதன் தாயிடம் கொண்டுவந்து விட்டான். நண்பகல் வரை அவர் மடியில் கிடந்தபின், அது இறந்து போனது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 March 2024, 10:06