துய வளனார் துய வளனார் 

நேர்காணல் – தந்தையருள் சிறந்த தந்தையானத் தூய வளனார் திருவிழா

தந்தையருள் சிறந்த தந்தையாய் இந்த தரணி சிறக்க வாழ்ந்து, வாழ்வின் இலக்கணம் படைத்தவர் நம் சூசை தந்தை தூய வளனார். எங்கும் வளமை எதிலும் வளமை எப்போதும் வளமை. வளமையையும் மகிழ்வையும் வற்றாமல் கொடுப்பவர் வளனார்.
நேர்காணல் - அருள்தந்தை ஜான் கென்னடி.

மெரினா ராஜ் – வத்திக்கான்

பசிக்கும் முன்னே உணவளிப்பவள் தாய் என்றால் விழும் முன்னே கைகொடுப்பவர் தந்தை. தாயின் அன்பைப் பிறந்த பின் அறிந்து விடலாம். தந்தையின் அன்பை அறிந்த பின், புது மனிதனாகவேப் பிறந்து விடலாம். தந்தையருள் சிறந்த தந்தையாய் இந்த தரணி சிறக்க வாழ்ந்து, வாழ்வின் இலக்கணம் படைத்தவர் நம் சூசை தந்தை தூய வளனார். எங்கும் வளமை எதிலும் வளமை எப்போதும் வளமை. வளமையையும் மகிழ்வையும் வற்றாமல் கொடுப்பவர் வளனார்.

மார்ச் மாதம் 19ஆம் நாள் திருஅவை நினைவுகூர இருக்கும் தூய வளனாரின் திருவிழாவை முன்னிட்டு அவர் பற்றியக் கருத்துக்களை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்ள இருப்பவர் அருள்தந்தை ஜான் கென்னடி. தூய ஆவியார் சபையை சார்ந்த அருள்தந்தை அவர்கள் தற்போது மதுரை உயர்மறைமாவட்டம் கருமாத்தூர் அருகில் உள்ள முண்டுவேலன்பட்டி தூய ஆவியார் தியான இல்லத்தின் இயக்குனராகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார். இறைவார்த்தைப் பற்றியத் தனது கருத்துக்களை மறையுரையாகவும் ஆன்மிகச் சிந்தனைகளாகவும் வழங்கி வரும் அருள்தந்தை ஜான் கென்னடி அவர்களை, தூய வளனார் பற்றிய செய்திகளை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

உறவுகளை வீட்டில் விட்டு விட்டு, அவர்களின் உயர்வுக்காக உழைத்து, தன் துயரத்தை மறந்து பிறர் துயர் நீக்க போராடி, தன் வாழ்வில் தான் பெறாதவற்றை தன் பிள்ளைகள் பெற்று மகிழ வழிசெய்து, தயக்கத்தைப் போக்கி, தைரியத்தை கற்றுத்தந்து, தூய தந்தையாகத் துணிவுடன் திகழும் நம் தூய வளனார் போல வாழ அவரிடம் அருள்வேண்டுவோம். தந்தையாய் உடனிருந்துத் துணிவினைத் தங்கள் பிள்ளைகளுக்குத் தரும் அனைத்துத் தந்தையர்களுக்கும், இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 March 2024, 09:20