தடம் தந்த தகைமை – இஸ்ரயேலரின் படையைக் காத்த எலிசா
மெரினா ராஜ் - வத்திக்கான்
சிரியாவின் மன்னன் இஸ்ரயேல் நாட்டின் மீது போர் தொடுத்தான். அப்பொழுது அவன் தன் அலுவலரோடு கலந்து பேசி, “இந்த இடத்தில் பாளையம் இறங்குவோம்” என்றான். அப்பொழுது கடவுளின் அடியவர் இஸ்ரயேல் அரசனிடம் ஆளனுப்பி, “அந்த இடத்திற்குப் போகாமல் எச்சரிக்கையாயிரும், ஏனெனில், அங்கே சிரியர் பதுங்கி இருக்கின்றனர்” என்று சொல்லச் சொன்னார். இஸ்ரயேல் அரசன் கடவுளின் அடியவர் எச்சரித்துக் குறிப்பிட்ட ஒவ்வோர் இடத்திற்கும் ஆளனுப்பினான். இவ்வாறு, அவன் தன்னைக் காத்துக் கொண்டது ஒருமுறை, இருமுறை அல்ல.
இதன் பொருட்டுச் சிரியாவின் அரசன், நெஞ்சம் கொதித்துத் தன் பணியாளர்களைக் கூப்பிட்டு, “இஸ்ரயேல் அரசனுக்கு ஒற்றனாக நம்மிடையே ஒருவன் இருக்கின்றான். அவன் யாரென்று தெரிய வேண்டும்” என்றான். பணியாளருள் ஒருவன் அவனை நோக்கி, “என் தலைவரான அரசே! அப்படி ஒருவனும் இங்கில்லை. ஆனால், இஸ்ரயேலில் இருக்கும் எலிசா என்ற இறைவாக்கினர் தாங்கள் பள்ளியறையில் பேசுவதைக்கூடத் தம் அரசனுக்கு வெளிப்படுத்தி விடுகிறார்” என்றான்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்