நேர்காணல் – நற்செய்தியாளரான தூய மாற்கு
மெரினா ராஜ் - வத்திக்கான்
மாற்கு நற்செய்தியின் ஆசிரியராகக் கருதப்படும் தூய மாற்கு கிறிஸ்தவத்தின் மிகவும் பழைமையான நான்கு ஆயர்பீடங்களுல் ஒன்றான அலெக்சாந்திரியா திருஅவையின் யின் (Church of Alexandria) நிறுவனராகக் கருதப்படுகின்றார். இவர் ஜான் மார்க் என்று அழைக்கப்படுவதை புதிய ஏற்பாட்டு நூல்களில் நாம் காணலாம். தொடக்க கால கிறிஸ்தவர்கள் தூய மாற்கையும் அவரது தாயாரையும் அதிகமாக மதித்ததுடன் அவர்களது இல்லத்தில் கூடி செபித்ததாகவும் கூறப்படுவதுண்டு. தூய பவுல் சைப்பிரஸ் தீவிர்கு செல்லும்போது மாற்கு உடன் இருந்தார் என்றும், தூய பேதுருவின் சீடராக இருந்தார் எனவும் கூறப்படுகின்றது. என் மகன் மாற்கு என தூய பேதுரு தனது திருமடலில் இவரைப் பற்றியேக் கூறுகின்றார். ஏப்ரல் 25 அன்று திருஅவையில் சிறப்பிக்கப்பட இருக்கும் நற்செய்தியாளரான தூய மாற்கு பற்றி இன்றைய நேர்காணலில் நம்முடன் பகிர்ந்து கொள்ள இருப்பவர் அருள்முனைவர். ராய் லாசர்
வேலூர் மறைமாவட்ட அருள்பணியாளரான அருள்முனைவர் ராய் லாசர் அவர்கள், 132 இலத்தீன் கத்தோலிக்க மறைமாவட்டங்களில் உள்ள ஏறக்குறைய 12000க்கும் அதிகமான குருக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய மறைமாவட்ட குருக்கள் பேரவையின் தலைவராக உள்ளார். இவர் ஜெர்மனியின் உர்பெர்க் பல்கலைக்கழகத்தில் மேய்ப்புப்பணி இறையியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் பல்சமய உரையாடல், ஆன்மிகம், மேயப்புப்பணி ஆலோசனை, மதம், சமாதானம், சமூகவியல் மற்றும் உளவியல், இளையோர் வழிகாட்டி என பல துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர். இவர் சென்னை பல்கலைக்கழகம், பூவிருந்தவல்லி திருஇருதய குருமடம், வேப்பூர் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆன்மிக மையம் ஆகியவற்றில் மேய்ப்புப்பணி இறையியல் சார்ந்த பாடங்களைக் கற்பித்தவர். வேலூர் மறைமாவட்டத்தின் பல்வேறு பங்குத்தளங்களில் உதவிப் பங்குத்தந்தை, பங்குத்தந்தை, மறைமாவட்ட மேயப்புப்பணி நிலைய இயக்குநர், புனித பிரான்சிஸ் சவேரியார் இளங்குருமட உதவி இல்லத்தந்தை மற்றும் இல்லத்தந்தை என பலநிலைகளில் பணிபுரிந்துள்ளார். மேலும் தமிழ் இறையியல் மன்றத்தின் செயலராகவும், மறைமாவட்ட குருக்கள் பேரவையின் தலைவராகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இவரது சிறப்பான பணியின் காரணமாக, மனித உரிமை விருது மற்றும் நேரு கல்விப்பணி விருதுகளையும் பெற்றுள்ளார். தந்தை அவர்களை நற்செய்தியாளரான தூய மாற்கு பற்றி எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்