நேர்காணல் - உழைக்கும் மக்களின் தினம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
அடுத்தவரின் சிந்தனையால் கூட ஒருவர் உயர்ந்து விடலாம், ஆனால் உழைப்பு உன்னுடையதாகத்தான் இருக்கவேண்டும். ஏனெனில் உழைப்பே உயர்வைத்தரும். தோல்வி, அவமானம், உழைப்பு, நம்பிக்கை, விடாமுயற்சி, வெற்றி போன்றவைகளே வாழ்வின் படிகளாக உள்ளன. ஆக உழைப்பு என்பது எல்லாருக்கும் தேவையானது. சிறுதொழில் முதல் பெருந்தொழில் வரை எல்லா நிலை தொழில்களுக்கும் ஆதாரமாக இருப்பது உழைப்பு. இத்தகைய உழைப்பின் மகிமையை எடுத்துரைக்கும் விதமாக ஆண்டு தோறும் மே முதல் நாளை உழைப்பாளர் நாளாக நாம் கொண்டாடுகின்றோம். எனவே இன்றைய நேர்காணலில் உழைப்பாளர் தினம் பற்றியக் கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்முனைவர். மரிய அருள் ராஜா சே.ச
இயேசு சபை அருள்பணியாளரான அருள்முனைவர் மரிய அருள் ராஜா அவர்கள் தற்போது சென்னை லொயோலா கல்லூரியில் இயங்கிவரும் கலாச்சாரங்கள் மற்றும் சமயங்களுடனான உரையாடல் மையத்தின் இயக்குநராக பணியாற்றிவருகிறார். சென்னையில் உள்ள அருள்கடல் இயேசு சபை இறையியல் கல்லூரியில் 20 ஆண்டுகளாக இறையியல் துறைத்தலைவராகவும், டெல்லியில் உள்ள வித்யஜோதி, புனேவில் உள்ள ஞானஜோதி, பெங்களுருவில் உள்ள புனித பேதுரு, புனித அல்போன்ஸ், வித்யாதீப் கல்லூரிகள், திருச்சி புனித பவுல் கல்லூரி மற்றும் சென்னை பல்கலைக்கழகங்களில், விவிலியம், இறையியல், சமயம் ஆகிய பாடங்களை 29 ஆண்டுகளாக்க கற்பித்து வருகின்றார். 10 புத்தகங்களையும், 170 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் படைத்துள்ள இவர் பல்வேறு தேசிய மற்றும் பன்னாட்டு பத்திரிக்கைகளிலும் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அமெரிக்கா, தென்கொரியா, பிலிப்பைன்ஸ், ஹாங்காங், இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் உரையாற்றியும், மக்கள் இயக்கங்கள், மற்றும் விளம்புநிலை குழுக்களோடு தனது உரையாடலை தொடர்ந்து வருகின்றார். மேலும் இப்பணிகளோடு பல்வேறு பயிற்சிப்பட்டறைகளையும், ஆன்மிக வழிகாட்டுதல்களையும் வழங்கி வரும் தந்தை அவர்களை உழைப்பாளர் தினம் பற்றிய கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்